ஆடுகளின் தொழுவ குப்பை கூளங்களை இப்படி உரமாக பயன்படுத்தலாம்!

மூலிகை பூச்சிவிரட்டி எப்படி தயாரிக்கலாம்?

ஆடாதோடா இலை ,நிலவேம்பு, நொச்சி ,வேம்பு, பப்பாளி இலை ஆகிய ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.

இதனை பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 வீதம் கலந்து அதிகாலை அல்லது மாலை வேளையில் செடிகள் மீது தெளிக்கலாம்.

தாவரங்களுக்கு வரும் நோய்களில் என்னென்ன வகை உள்ளது?

பொதுவாக தாவரங்களுக்கு வரும் நோய்கள் வைரஸ் , பாக்டீரியா, பூஞ்சான் நோய் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

இலைப்புள்ளி நோய், பல வண்ண நோய் ,இலை சுருள் நோய் ,உச்சிக் கொத்து நோய் போன்றவையும் வைரஸ்களாலும் , வாடல் நோய் ,இலை வெடிப்பு நோய்,வெப்பு நோய்,சொறி நோய் , மென் அழுகல் நோய் கேன்கர் நோய் போன்றவை பாக்டீரியாவாலும் செவ்வழுகல் நோய், வெண் துரு நோய் ,கருத்துரு நோய் போன்றவை பூஞ்சையால் வருகின்றன.

கம்பளி புழுக்களை எப்படி கட்டுப்படுத்துவது?

குளிர்காலத்தில் கம்பளி பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய் 200 கிராம் வசம்பு பொடி கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மேலும் அதே போல் வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச் சாறு தெளிப்பான் மூலம் கம்பளி புழுக்களை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

ஆட்டு உரம் எப்படி தயாரிப்பது?

ஆடுகளின் சிறுநீரில் அதிக தழைச்சத்து உள்ளது. இதை வீணாகாமல் தடுக்க ஆடுகளின் தொழுவத்தில் நிலக்கடலைத் தோல், துண்டிக்கப்பட்ட வைக்கோல் , இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார் ,போன்றவற்றை பரப்பி விட வேண்டும்.

பிறகு ஆடுகளின் தொழுவத்தின் உடையன குப்பை கூளங்களை சிதை உருவதற்காக குழிகளில் போட்டு மக்கிய பிறகு உரமாக பயன்படுத்தலாம்.

தொடர் பருவ சுழற்சி ஏற்படுத்தும் கறவை மாடுகளை எவ்வகையில் பராமரிக்க இயலும்?

தரமான சமச்சீர் உணவு அளித்தல் அவசியம். சினைத்தருண அறிகுறிகளைக் கண்காணித்து உரிய நேரத்தில் சினை ஊசி அதாவது செயற்கை முறை கருவூட்டல் செய்தல் அவசியமாகும்.

சுமார் 12 மணி நேர இடைவெளியில் கரவை மாடுகளுக்கு 2 முறை சினை ஊசி போடலாம்.

ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு கர்ப்ப காலங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துதல் அவசியமாகும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories