ஆடுகள் சாதாரணமாக வளர்ப்பதை காட்டிலும் குறைந்து வரும் மேய்ச்சல் நிலத்தின் ஆல்பண்ணை அமைத்து பராமரிப்பது மிகச் சிறந்தது.
இடத்தேர்வு
ஆடுகளுக்கான பண்ணையை காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உள்ள இடத்தில் அமைக்க வேண்டும். அந்த பண்ணையில் சுற்று சுவர்கள் எதுவும் இல்லாமல் மரத்தூண்கள் அல்லது இரும்புத் தூண்கள் கொண்டு கூரை அமைக்கலாம்.
தீவனத் தொட்டி பராமரிப்பு
ஆட்டுப் பண்ணையில் இரும்பு அல்லது மரத்தாலான வட்ட வடிவ தீவனத்தொட்டி தண்ணீர் தொட்டி போன்றவை இருக்குமாறு அமைக்க வேண்டும்.