நெல் வயலில் பாக்டீரியா நோய்த் தாக்கம் இருந்தால் 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
நெல் வயலில் பூஞ்சாண நோய் மனநோய்நோய் தாக்கம் இருந்தால் 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்என்னென்ன?
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையில் பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும். பயிர் சுழற்சி மற்றும் கலப்பு பயிர் சாகுபடி செய்யலாம்.
அவ்வப்போது நிலத்தை தரிசாக விட்டு விட வேண்டும் .இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் பூச்சிகளைக் கவரும் செடி கொடிகளையும் ஓரத்தில் வளர்க்க வேண்டும். மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
வாய்க்கால் பாசனத்திற்கும் மாற்று வழி என்ன?
கிணற்றிலிருந்து வாய்க்கால் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் அதற்கு மாற்று வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனெனில் வாய்க்கால் மூலம்தண்ணீர் வயலுக்கு செல்லும் போது அதிகளவில் தண்ணீர் வீணாகும். இதற்கு நீர் தடத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் வயலின் ஒரு மூலையில் கேட் வால்வு அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மல்லிகை செடியிலும் நூர் புழு தாக்கத்திற்கான அறிகுறி என்ன? எவ்வாறு கண்டறியலாம்?
நூற்புழுநோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் இளம் மஞ்சள் நிறமாகி பிறகு கருகிவிடும்.
மேலும் நூற்புழு தாக்குதலை கண்டறிய மண் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்தில் கண்காணிக்க வேண்டும்.
ஆடுகளுக்கு வயிறு உப்புசத்தை எப்படி தடுக்கலாம்?
ஆடுகளுக்கு வயிறு உப்புசமாக இருக்கும் போது கடலை எண்ணெய் 50 மில்லி கொடுக்க வேண்டும். இந்த அளவு ஆட்டின் வயதை பொறுத்து மாறுபடும்.
50 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆடுகளுக்கு உடையது.