ஆடுகளைத் துவம்சம் செய்யும் ஆட்டுக்கொள்ளை நோய் பற்றி தெரிந்துகொள்வோம்!

ஆடுகளைத்தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான ஆட்டுக்கொள்ளை நோய் வைரஸால் ஏற்படுகிறது.

இந்நோயினைப் பற்றி (About this disease)
இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் காய்ச்சல்,பசியின்மை, வாயில் புண்கள் ஏற்படுதல், கழிச்சல், நுரையீரல் பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்
வெள்ளாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம். செம்மறியாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

நோய்க்கான காரணங்கள் (Causes of the disease)
பாராமிக்சோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த மார்பிலி என்ற வைரஸால், இந்த நோய் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடுகளிலிருந்து, மற்ற ஆடுகளுக்கு நேரடித் தொடர்பின் மூலம் இந்நோய் பரவுகின்றது.

அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர், படுக்கைப் பொருட்கள், மற்றும் இதர பொருட்கள், உபகரணங்கள் மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது மற்றும்

பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கு,வாய், சீரண மண்டலத்திலிருந்து வெளியேறும் திரவம், சாணம் போன்றவற்றில் வைரஸ் அதிகமாகக் காணப்படும்இதில்

முக்கியமாக சாணம் இந்த நோய் ஏற்படுத்தும் வைரஸைப் பரப்புவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

புதிதாக வாங்கப்பட்ட நோய் பாதிக்கப்பட்ட ஆட்டின் மூலம் பண்ணைக்குள் இந்த நோய் எளிதில் பரவும்.

நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத ஆடுகளால் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவும் என்றார்.

மூச்சுக்காற்றால் பரவும் (Spread by breath)
நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த தீவனத்தை உண்ணுதல் நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

எனினும் மூச்சுக்காற்று மூலமாக வைரஸ் ஆடுகளின் உடலினுள் சென்றும், கண்களிலிருந்து வெளிவரும் திரவத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பு மூலமாகவும் நோய்க்கிருமி பரவி நோய் ஏற்படுகிறது எனவே

பூச்சிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதில்லை.

காட்டில் வாழும் அசை போடும் பிராணிகளும் இந்நோயினைப் பரப்புவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

அறிகுறிகள் (Symptoms)
அதிகக் காய்ச்சல்

பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோல் உலர்ந்து, மூக்குக்கு மேலிருக்கும் தடித்த பகுதி வறண்டு, பசியின்றிக் காணப்படும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கிலிருந்து திரவம் வடிவதுடன், தும்மல், இருமல் காணப்படுதல்.

கண்கள் மற்றும் மூக்கிலிருந்து வடியும் திரவம் வறண்டு, கெட்டியாக கண்கள் மற்றும் மூக்கில் ஒட்டிக் காணப்படும் மற்றும்

உதடுகள், வாய் உட்சவ்வு, ஈறுகள், தாடையின் உட்பகுதி, நாக்கு போன்றவற்றில் ஏற்படும் புண்கள் அழுகி, கெட்ட வாசனை வீசுதல்.

கண்களின் உட்சவ்வு மிகவும் சிவந்து, கண்களின் இமை காணப்படுதல்.

நுரையீரல் அழற்சி ஏற்பட்டு, ஆடுகள் மூச்சு விட சிரமப்பட நேரிடும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளில் கழிச்சல் ஏற்படுதல். சாணத்தில் சளி மற்றும் இரத்தம் கலந்து காணப்படுதல்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆடுகள் நோயின் தாக்குதலிலிருந்து மீண்டு விடும். ஆனால் சில ஆடுகள் இறந்து விடும்.

பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி (Recommended first aid)
நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளைத் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரித்தல்.

பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளித்தல்.

அரிசி, ராகி மற்றும் கம்புக் கூழ் தயாரித்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

விலங்குக் கொழுப்பு அல்லது கிளிசரினை புண்களின் மீது தடவுவது அவசியம்.

கால்நடை மருத்துவரின் உடனடி ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

ஒரு கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயினை ஒரு நாளைக்கு 2-3 முறை கழுவ வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு எதிர்உயிரி மருந்துகள் அல்லது இதர சிகிச்சையை அளிக்க அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுக வேண்டும்.

நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும் போது அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி அந்தப் பகுதியில் வட்ட தடுப்பூசி முறையினை அமல்படுத்துதல்.

நோய்த்தடுப்பு முறைகள் (Immunization methods)
ஆடுகளுக்கு முறையான இடைவெளியில் சரியாகத் தடுப்பூசி அளித்தல்.

நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுதல்.

ஆட்டுக்கொள்ளை நோயினை ஏற்படுத்தும் வைரஸ் பெரும்பாலான கிருமி நாசினிகளால் கொல்லப்பட்டு விடும் மற்றும்

உதாரணம். பீனால், சோடியம் ஹைட்ராக்சைடு (2%)

நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு நோய் எதிர்ப்புரதங்கள் கொண்ட ஊநீரை சிகிச்சைக்காக அளிக்கலாம்.

வெளிநாடுகளிகளில் இருந்து வாங்கப்பட்ட செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை குறிப்பிட்ட நாட்களுக்குத் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories