ஆடுகள் வளர்க்கப்போறீங்களா? சில முக்கிய வழிமுறைகள்!

ஆடு வளர்ப்புத் தொழில் செய்யலாம் என எண்ணுபவராக இருந்தால், அவர்கள் பின்வரும் ஆலோசனைகளைக் கடைப்பிடித்து நல்ல லாபம் ஈட்ட முடியும்.

நல்ல காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் அல்லது மர நிழல்களில் பராமரிக்க வேண்டும்.

அந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய தீவனங்களை முறையாக அளித்து அதனை பரவலாக்கம் செய்ய வேண்டும்.

மண்ணில்லா (ஹைட்ரோ போனிக்ஸ்) விவசாய முறையில் (Hydro Phonics) விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும் என்றார்.

மழை காலத்திற்கு முன் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக் கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து, தக்க குடற்புழு நீக்க மருந்தினை பயன்படுத்தவும்.

துள்ளுமாரி தடுப்பூசியினை மே மாதத்தில் போடவேண்டும்.

நீல நாக்கிற்கான தடுப்பூசியினை ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்குள் போட வேண்டும்.

பட்டியில் புதிதாக சேர்க்கப்படும் ஆடுகளில் பிபிஆர் அல்லது பிற நோய் தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கு அந்த ஆடுகளை 25 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்படக்கூடிய மேய்ச்சல் நிலப் பற்றாக்குறையைத் தவிர்க்க, சினைப்பிடித்த ஆடுகளுக்கு 250 முதல் 300 கிராம் அடர் தீவனம் கொடுப்பதன் மூலம் கருச்சிதைவு அல்லது ஊட்டச்சத்து குறை உள்ள குட்டிகளை தவிர்க்கலாம்.

மழை காலங்களில் தீவன மரக்கன்றுகளை நடவு மேற்கொண்டு பசுந்தழைகளை ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.

மேய்ச்சல் நிலங்களில் தீவன பற்றாக்குறை உள்ள சமயங்களில் ஆடுகளுக்கு பயிர் கழிவுகள், மரபுசாரா தீவனங்களாகிய மரவள்ளி இலைகள், வெங்காய பயிர் கழிவுகள், வாழை இலைகள் மற்றும் தண்டுகளை உணவாக அளிக்கலாம்.

அசோலாவை ஆடுகளுக்கு 250 முதல் 500 கிராம் வரை ஒரு நாளைக்கு பகுதி உணவாக அளிக்கலாம்.

ஒட்டுண்ணிகளின் பாதிப்பிலிருந்து பாதுக்காக்க ஒட்டுண்ணி கட்டுப்படுத்தும் மருந்தினை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories