ஆடு வளர்ப்பில் அசத்தல் லாபம் பெறுதல்!

குடும்பத்தைக் காப்பாற்றக் கடுமையாக உழைக்கும் கணவருக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என விரும்பும், கிராமத்துப் பெண்மணியா நீங்கள்? உங்கள் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள உதவுகிறது அக்ரோடெக் (Agrotech) நிறுவனம்.

இந்த ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது என்றார்.

கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து ஆடு வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

9 மாவட்டங்கள் (9 Districts)
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆடுவளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பராமரிப்புக்கு வழிகாட்டுதல் (Guidance for maintenance)
விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு விவசாயிகளுக்கு ஆடுகளை விலையில்லாமல் விநியோகிப்பதுடன், ஆடுவளர்ப்பதற்குத் தேவையான உதவிகளையும்,வழிகாட்டுதலையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது.

ஆடு வங்கித் திட்டம் (Goat Bank Scheme)
அதேபோல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு மாற்றாக ‘ஆடு வங்கித் திட்டம்’ என்னும் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

நியாயமான விலை (Reasonable price)
இதன்மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆட்டின் எடைக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கும் நேரடியாகத் தரமான ஆட்டை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

பலவகைப் பயிற்சி (Various training)
மேலும் கிராமப்புற மகளிர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கும்வகையில் நாட்டுமாட்டு சாணத்தில் இருந்து விபூதி, வரட்டி, அகல்விளக்கு தயாரித்தல், இயற்கையான முறையில் சோப்பு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் அக்ரோடெக் நிறுவனம் அளிக்கிறது.

கிராமப்புற மகளிர்களுக்கு இதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்குவதோடு அவர்களிடம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுத்து அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதன்மூலம் ஒரு கிராமப்புற மகளிர் சராசரியாக 5000 ரூபாய் வரை வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டமுடியும் என்றார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories