ஆடு வளர்ப்பில் அதிக லாபம்*

ஆடு வளர்ப்பில் அதிக லாபம்*

தீவன மர இலைகள்: தீவன மர இலைகளையும், விவசாய விளை பொருட்களின் துணை பொருட்களையும் தினமும் கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். கடலைக்கொடி, துவரம் பொட்டு, உளுந்தம் பொட்டு போன்றவற்றையும் அகத்தி, ஆல், வேம்பு, புளி, சூபாபுல், வேலி மசால், பூவரசு, வாகை போன்ற தாவரங்களின் இலைகள், கருவேலான், குடை வேலான் இவற்றின் நெற்றுகளையும் தீவனமாக கொடுக்கும் போது ஆடுகளின் உடல் எடை கூடும். இதனால் வருமானம் பெருகும்.
குட்டிகளை பிரித்தல்: பிறந்த குட்டிகளை தாய் ஆட்டுடன் தொடர்ச்சியாக மேய விடக்கூடாது. 6 மாதம் வரை பால் குடித்தால் ஆடுகள் மறுபடியும் சினைக்கு வருவது தாமதமாகும். எனவே குட்டிகளை 2 மாதத்திலேயே தாயிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். இதனால் பெட்டை ஆடுகள் 3 மாதத்தில் சினைப்பருவத்துக்கு வந்து விடும். ஆடுகள் தன் ஆயுள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுவதால் வருவாய் கூடும்.
*ஓட்டுண்ணிகளை நீக்குதல்:* மேய்ச்சல் தரையில் உள்ள தண்ணீரை ஆடுகள் குடிக்க பயன்படுத்துவதால் பல வகையான குடற்புழுக்களின் முட்டைகள் ஆடுகளை சென்றடைகின்றன. இப்புழுக்கள் ஆடுகளின் உடல் எடையை குறைப்பதோடு கழிச்சல் போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. இதனை தவிர்க்க மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்துகள் தர வேண்டும். இச்சிகிச்சையின் பலனால் ஆடுகள் எடை கூடும். இதனால் வருவாய் அதிகரிக்கும்.
ஆடுகளை செழுமை செய்தல்: அதிக எடையுடன் குட்டிகள் பிறக்கவும், குட்டிகளுக்கு தொடர்ந்து பால் கிடைக்கவும், ஆண்டுக்கு இரண்டு முறை குட்டிகள் ஈனவும் சினை பருவ காலத்தில் ஆடுகளை கொழுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செழுமை செய்தல் என்னும் பராமரிப்பு முறையால் வெள்ளாடுகளில் ஒரு ஈற்றில் 4 குட்டிகள் பிறக்கவும், ஆண்டுக்கு இரண்டு முறை என இரட்டை குட்டிகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையின் பொருளாதாரம் அதிகரிக்கும்.
– டாக்டர் வி. ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்பு துறை94864 69044

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories