ஆடு வளர்ப்பு – ஒரு கண்ணோட்டம்……

1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
2. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்.
3. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
4. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 20-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
5. அதிகமான குட்டிகளை ஈனுகிறது நல்ல எரு கிடைக்கிறது,வருடம்முழுவதும் வேலை
வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி
நல்ல உயரமானவை
• காதுகள் மிக நீளமனவை
• ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
• கிடா 65-85 கிலோ பெட்டை – 45-60 கிலோ.
• பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
• 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்

தலைச்சேரி / மலபாரி
• வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
• 2-3 குட்டிகளை போடும் திறன்
கிடா – 40-50 கிலோ பெட்டை – 30 கிலோ
போயர்
• இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது..
• வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
• கிடா – 110-135 கிலோ பெட்டை – 90-100 கிலோ.
• குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
• 2-3 குட்டிகள் ஈனும் திறன்
• 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்.
• தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
• 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
• நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும் தீவனப் பாரமரிப்பு
• வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
• கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம். • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல்,கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
• ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories