ஆட்டுப்பாலில் உள்ள சிறந்த அம்சங்கள் மற்றும் முக்கியத்துவங்கள் பற்றி அறியலாம்!

கால்நடை வளர்ப்பு இந்தியாவில் ஒரு முக்கியமான வணிகமாகும். இந்தியாவில் பசு, எருமை மற்றும் ஆடுகளின் அளவு அதிகமாக உள்ளது. ஆடுகளில் 20 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன ஆனால் இந்த ஆட்டு இனங்களில் இறைச்சி மற்றும் பால் வகைகளை பிரிப்பது மிகவும் கடினம். இதில் சில இனங்கள் பால் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டிற்குமே பராமரித்து வளர்க்கப்படுகிறது, இவ்வகை இனங்களானது வரதட்சணை இனங்கள் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கால்நடை வளர்ப்புகளில் ஆடும் முக்கியத்துவம் வகிக்கிறது. இறைச்சி, பால், இழை மற்றும் தோல்களுக்காக இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெவ்வேறு இனங்களை சேர்ந்த ஆடுகள் சில உள்ளன. வட இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் இறைச்சி மற்றும் இழை இவ்விரண்டிற்காக மட்டுமே வளர்கின்றன. மேலும் ஆடு ஏழை மற்றும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடையாக இருக்கிறது, ஏனென்றால் இதனை வளர்ப்பதற்கும், இதற்கான உணவு கொடுப்பதற்குமான செலவு மிக குறைவு. இத்தகைய காரணத்தாலேயே மஹாத்மா காந்தி ஆடுகளை ஏழைகளின் வளர்ப்பு பிராணி என்றார்.

ஆட்டுப்பாலின் அம்சங்கள்
ஆட்டுப்பாலில் கொலஸ்ட்ரால் (Cholesterol) குறைவாக இறுகுப்பதால் இது குழந்தைகளின் ஜீரணத்தில் எவ்வித கோளாறையும் ஏற்படுத்தாது. மேலும் குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுப்பதே சாலை சிறந்தது.

ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு குளோபல்ஸ் (Fat Globules) சிறியதாக இருப்பதால் பால் ஏடு தனித்து வராது. எனவே ஆட்டுப்பால் இயல்பான உடற்கூறு என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுப்பாலில் வைட்டமின் ‘A’ (Vitamin A) அதிகம் உள்ளது.

ஆட்டுப்பாலில் அதிக குளோரின் (Chlorine) மற்றும் சிலிக்கான் (Silicon) உள்ளன.

ஆட்டுப்பால் மற்றும் மனிதப்பாலின் கட்டமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்.

ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு குளோபியூல்கள் சிறியதாக இருப்பதால் ஜீரணத்திற்கு சிறந்ததாக உள்ளது.

பசும்பாலினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுபவர்களுக்கு ஆட்டுப்பாலை கொடுக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுப்பாலை கொடுத்தால் மிக நல்லது.

அல்சர் (ulcer), வயிற்றில் ஏற்பட்டுள்ள புண் ஆகிய பிரச்சனைக்கு ஆட்டுப்பாலை காய்ச்சாமல் அப்படியே குடித்து வர விரைவில் குணமாகிவிடும்.

ஆட்டுப்பாலின் முக்கியத்துவம்
உடலின் சக்தியை உருவாக்கவும், அதிகரிக்கச் செய்யவும் அவசியமானது ரிபோப்லாஸ்டின் (Riboplastin) என்று அழைக்கப்படும் வைட்டமின். மேலும் இந்த வைட்டமின்னானது ஆட்டுப்பாலில் அதிகம் காணப்படுகிறது. எனவே உடல் ஆரோக்கியத்தையும், சக்தியையும் அதிகரிக்க ஆட்டுப்பால் ஓர் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

ஆட்டுப்பாலில் கால்சியம் (Calcium) அதிகம் இருப்பதால் எலும்புகள் இடையூறு குறைக்கிறது மற்றும் பெரிய குடல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.

கெட்டக்கொழுப்பை அதிகரிக்க விடாமல் உடல் பருமனை தடுக்கிறது மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

அதிக பொட்டாசியம் (potassium) இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் ஆட்டுப்பால் உதவுகிறது.

ஆட்டுப்பாலில் சர்க்கரை மற்றும் கொலெஸ்ட்ரோலின் அளவு மிக குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக பருகலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories