ஆட்டுப் பண்ணை தொடங்குவதற்கு முன்னல் இதெல்லாம் தயார் செய்வது அவசியம்..

தற்போதைய சூழலில் 10 ஆடுகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு சுமார் 1 இலட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.

ஆடு வளர்ப்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான மேய்ச்சல் நிலம் மற்றும் தீவன வகைகளை பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பே தயார் செய்ய வேண்டும்.

ஆடுகளை வாங்குவதற்கு முன்பு அதற்குத் அடிப்படை தேவையான தீவனத்தை முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும்.

தீவன வகைகளை என்று எடுத்துக்கொண்டால் சுபா புல், அகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, வேம்பு என ஐந்து மரங்களாவது குறைந்த பட்சமாக இருக்கவேண்டும்.

இத்தீவன வகை மரங்களின் வளர்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள். வெள்ளாடுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டாம்.

அது பலசுவை விரும்பிகள், பல்வேறு புற்களையும், இலைதழைகளையும் தின்று வளர்பவை.. எனவே தொடர்ந்து ஒரே வகையான தீவனத்தை கொடுப்பதற்கு மாற்றாக சில வகைகளை தீவனங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் அதற்கும் வயிறு நிரம்பிய திருப்தி இருக்கும்.

எனவே முதலில் இதை நீங்கள் உங்கள் நிலத்தில் வளர்த்துக்கொண்டு பிறகு ஆடுகளையும், பண்ணையையும் தயார் செய்யலாம்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories