மாடு மறு வருஷம். ஆடு அவ்வரசஅவ்வருஷம் என்று கிராமங்களில் பெரியவர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். அதாவது மாடு வாங்கினால் அடுத்த வருஷத்துல இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனால் ஆடு வாங்கினால் அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என கூறுவார்கள் .அது உண்மைதான். அதை பற்றி இங்கு காணலாம்.
பொதுவாகவே விவசாயத்தில் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு .அதாவது அவை இடும் சாணம் இயற்கை உரங்களாக பயன்படுகின்றன.
மாட்டு சாணத்தை மட்க செய்து அதன்பிறகு மண்ணிற்கு உரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் ஆட்டு எருவை மண்ணில் அப்படியே உரமாக பயன்படுத்தலாம்.
ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 0.9% தழைச்சத்து ,0.4 சதவீதம் மணிச்சத்து, 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. அதோடு ஆட்டு சிறுநீரகத்தில் தழைச்சத்து 1.7 சதம் ,சாம்பல் சத்து 2 சதமும் உள்ளது.
பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மெக்னீசியம், போரான் ,கோபால் ,தாமிரம் ,துத்தநாகம் போன்ற சத்துக்களும் ஆட்டு எருவில் உள்ளன. ஆட்டு எருவை மண்ணிற்கு உரமாகவும் பயன்படுத்துவதால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து மண்ணிற்கு ஈரப்பதத்தை சேர்க்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும் பொதுவாக ஆட்டு எருவை மண்ணில் அப்படியே பயன்படுத்துவதற்கு பதில் ஆழ்கூள முறையில் மூலம் சேகரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.
ஆட்டுக் கொட்டகையின் தரை பகுதியில் நிலக்கடலை தோல், வைக்கோல்( சிறு துண்டுகளாக வெட்டியது) இலை சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் ஆழ் குளம் அமைக்க வேண்டும் .இதன்மூலம் ஆ ட்டுச்சாணம் ஆழ்கூளத்தில் படிந்துவிடும். ஆ ட்டு சிறுநீரானது ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழை சத்து வீணாவதை தடுக்கும்.
ஆழ்கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ஆழ் கூள் ஆட்டு எருவை எடுத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம். ஆட்டு எருவானது களை வளர்வதைத் தடுப்பதால் களை எடுப்பதற்கு ஆகும் செலவு குறையும்.
இதனை நெல் ,தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற அனைத்து வகையான வேளாண்மைப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.