ஆட்டு எருவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து நிறைந்துள்ளது .ஒரு ஆடு ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் நமது வயலுக்கு அளிக்கிறது .ஒரு ஏக்கர் நிலத்திற்கு எல்லா சத்துகளையும் அளிக்க 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது .ஆட்டு எரு மண் வளத்தை அதிகப்படுத்துகிறது .மேலும் இதை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு கொடுக்கப்படும் தீவனத்தின் அளவு பொறுத்தே அமைகிறது.
சத்துக்கள்
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல் தட்டைப்பயறு போன்றவற்றை கொடுத்தால் எருவில் தழைச்சத்து நுண்ணூட்டச் சத்து மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கும்.