ஆட்டு எருவில் கிடைக்கும் லாபம்

 

மாடு வாங்கினால் அடுத்த வருடத்திலிருந்து தான் பலன் கிடைக்கும். ஆனால் ஆடு வாங்கினால் அந்த வருடத்தில் இருந்து பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள். விவசாயத்தில் ஆடுகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு .மாட்டு சாணத்தை எடுத்து கொண்டால் அவற்றை மட்க செய்து அதன் பிறகு மண்ணிற்கு உரமாக பயன்படுத்தலாம். ஆட்டு எருவை மண்ணில் அப்படியே உரமாக பயன்படுத்தலாம்.

ஆட்டு எருவில் 60 முதல் 70 சதவீதம் தண்ணீரும் 0.9% தழைச்சத்தும், 0.4 சதவீதம் மணிச்சத்து, 1.7 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து 1.7 சதவீதம் சாம்பல் சத்து 2% உள்ளது .மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான் ,மெக்னீசியம், கோபால்ட் ,தாமிரம் ,துத்தநாகம் போன்ற சத்துகளும் இதில் உள்ளது. ஆட்டு எருவை மண்ணில் உரமாகப் பயன்படுத்துவது கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேர்க்கும் திறன் அதிகரிக்கும் .பொதுவாக ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவானது அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே மாறும். ஆட்டு எருவை மண்ணில் அப்படியே பயன்படுத்துவதற்கு பதில் ஆழ்கூள முறையின் மூலம் சேகரித்து பயன்படுத்தலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories