இந்த இரண்டு நோய்களும் ஆடுகளை பெருமளவு தாக்கி ஆபத்தை விளைவிக்கும்…

1.. நீலநாக்கு!

‘க்யூலிக்காய்ட்ஸ்’ங்கற சின்னக் கொசுக்கள் மூலமா இந்த நோய் பரவுது. இந்தக் கொசு மழைக்காலங்கள்ல அதிகமா இனப்பெருக்கம் செய்றதால… அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள்லதான் இந்த நோயும் அதிகமா பரவும். செம்மறியாடுகள்தான் அதிகமா பாதிக்கப்படும். நோய் வந்த ஆடுகளுக்கு காய்ச்சல் வரும். மூக்குல ரத்தத்துடன் கூடிய சளி வரும். உதடு, ஈறு, நாக்கு எல்லாம் வீக்கம் கண்டு, புண் உண்டாகும். சமயங்கள்ல நாக்கு தடிச்சு நீல நிறமா மாறும். கால் குளம்புகளும், தோலும் சேர்ற இடத்துல வீக்கம் ஏற்பட்டு நொண்டும்.

இந்நோய், கழுத்துத் தசைகளையும் பாதிக்கிறதால, கழுத்து ஓரு பக்கமாக சாய்ஞ்சுக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகள் இரை எடுக்காம பட்டினி கிடந்து இறந்துடும். சினை ஆடுகளுக்கு வந்தா… கருச்சிதைவு ஏற்படும். நோய் கண்ட ஆட்டை தனியா பிரிச்சுடணும். அரிசி, கம்பு, கேழ்வரகு மாதிரியான தானியங்கள்ல கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.

கொட்டிலைச் சுத்தி தண்ணி தேங்காம பாத்துக்கணும். கொட்டில்ல, வேப்பம் பிண்ணாக்கு புகை போட்டு கொசுக்கள தடுக்கணும். பாதிக்கப்பட்ட ஆடுகளோட பல்லையெல்லாம் உப்பு நீர், இல்லனா 1 லிட்டருக்கு 1 கிராம் ‘பொட்டாசியம்-பர்மாங்கனேட்’ கலந்த தண்ணி மூலமா தினமும் 2 அல்லது 3 முறை கழுவணும். புண்களுக்கு கிளிசரின் தடவலாம். இறந்த ஆடுகள குழிதோண்டி, சுண்ணாம்புத்தூள் தூவி புதைக்கணும்”.

2.. அம்மை!

ஒரு வகை நச்சுயிர்க் கிருமியால் ஏற்படுற நோய் இது. நோய் கண்ட ஆடுகளோட உடல் வெப்பநிலை அதிகரிக்கும். தீவனம் எடுக்காது. ரோமம் இல்லாத பகுதியில கொப்புளங்கள் வரும். குட்டிகளுக்கு நோய் வந்தா… இறப்பு அதிகமாக இருக்கும். நோய் கண்ட ஆடுகள பிரிச்சு, மருத்துவர் மூலமா, ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கணும்.

உடம்புல இருக்கற புண்ணுங்கள, ‘பொட்டாசியம்-பர்மாங்கனேட்’ கலந்த தண்ணியால சுத்தம் செஞ்சு ‘போரிக் ஆசிட்’ பவுடரைத் தூவணும். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு கஞ்சி மாதிரியான மிருதுவான உணவைக் கொடுக்கணும். நோய் வந்த ஆடுகளோட பால் உட்பட எதையும் மனிதர்களுக்கோ… ஆட்டுக் குட்டிக்கோ பயன்படுத்தக் கூடாது. செம்மறி ஆடுகளதான் இது அதிகமா தாக்கும். தடுப்பூசி போட்டு பாதிப்பைத் தடுக்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories