கன்னி ஆடுகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் இந்த தகவல்களை தெரிஞ்சிருக்க வேண்டும்…

கன்னி ஆடுகள் காணப்படும் இடங்கள்:

விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.

கன்னி ஆடுகளின் சிறப்பியல்புகள்:

இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும்.

கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.

குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள்.

இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.

அதிக அளவில் 2 குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை

மிகவும் குறைவான இறப்பு விகிதம்

கொட்டில் முறையில் ஆடு வளர்ப்புக்கு எற்றது

வெப்ப காலநிலைகு எற்றது

எடை விவரம்

பிறந்த கிடா குட்டிகள்: 1.5 – 2.1 கிலோ எடை

பெட்டை குட்டிகள்: 1.5 – 2.05 கிலோ எடை

மாதாந்திர எடை வளர்ச்சி: 2..5 கிலோ எடை

சினைக்காலம்

பெட்டை ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்களாகும்

வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories