காளானை எப்படி குடில் முறையில் வளர்க்கலாம்

 

ஒரு ஏக்கருக்கு 40 சதவீத நிலத்தில் நெல், தானியங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் மீதி நிலத்தில் மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழ மரங்கள் வளர்த்தால் தொடர் வருமானம் கிடைக்கும்.

இப்படி செய்தால் முதல் வருடத்தில் இருந்தே வருமானம் கிடைக்கும் .இரண்டாவது மூன்றாவது வருடத்தில் வருமானம் மேலும் பெருகும் னவேபல வகையான பயிர்களை நிலத்தில் பயிரிடலாம்.

கத்திரி செடியில் உள்ள மஞ்சள் பூச்சு எப்படி கட்டுப்படுத்துவது

வேப்ப இலை, எருக்கு இலை, ஊமத்தை இலை ,நொச்சி இலை மேலும் ஆடு மாடு சாப்பிடாத இலைகள் ஆகியவற்றை தூளாக்கிய நாட்டு மாட்டின் கோமியம் 2 லிட்டர் மற்றும் நீர் தேவையான அளவு சேர்த்து மூன்று நாள் ஊறவைக்க வேண்டும்.

மூன்று நாள் கழித்து அந்த கரைசலை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

மல்லிகையில் வரும் வா டல் நோய்க்கான அறிகுறி என்ன அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்.

மல்லிகையில் வாடல் நோய் தாக்கப்பட்ட இருந்தால் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

பிறகு படிப்படியாக இளம் இலைகளுக்கும் பரவி முடிவில் முழு செடிகள் காய்ந்து விடுகின்றன.

50 கிலோ தொழு உரத்தில் கலக்கப்பட்ட இரண்டு கிலோ டிரைகோடெர்மா கலவையை இடவேண்டும். சாம்பல்சத்து உரமிடுதல் இந்த நோயை தவிர்க்கும் ஒரு முறையாகும்.

காளானை எப்படி குடில் முறையில் வளர்க்கலாம்

காளான் வளர்ப்புக்கு சாதாரண குடிசையே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் இடம் இருந்தால் போதும்.

இந்த இடத்தை அறையாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆட்டின் சினை பருவ காலம் எவ்வளவு நாள் குட்டி ஈன்ற ஆடுகள் சீக்கிரம் பருவத்திற்கு வரை என்ன செய்ய வேண்டும்.

குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.

எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுதல்ல்சரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும்.

ஒரு ஈத்துக்கு இரண்டு குட்டிகள் ஈனும். நாற்பது நாள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories