செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

🐐 செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

🐐 மழைக்காலத்திலும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த நோய் செம்மறி ஆடுகளை அதிகளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

🐐 வைரஸ் எனப்படும் நச்சுக்கிருமியால் கொசுக்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் அதிக ஜூரத்துடன் சோர்வாக காணப்படும்.

🐐 மூக்கு மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக்கொண்டிருக்கும். நாக்கு சில சமயம் நீலநிறமாக மாறுவது உண்டு. கால்குளம்பின் மேல்பகுதி சிவந்து வலியுடன் இருக்கும்.

🐐 இதனால் ஆடுகள் நொண்டி நடக்கும். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் கூலிக்காட்ஸ் எனும் ஒருவகை கொசுவால் மட்டுமே பரவுகிறது.

🐐 மழைக்காலங்களில் கொசுவின் உற்பத்தி அதிகம் உள்ளதால் நோய் அதிகமாக பர

கொட்டகை அமைப்பு

🐐 ஆடுகளை இரவு நேரங்களில் மழை மற்றும் பனி தாக்குதல் இல்லாமல் மேடான கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். கொசுவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆட்டுக்கொட்டகையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது.

🐐 ஆட்டுக்கொட்டகையைச் சுற்றி உள்ள புதர்கள் அழிக்கப்படவேண்டும். t.me/MSRIGroupsAT கொசுக்கள் மாலை இருட்டும் நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் வந்து ஆடுகளைக் கடிப்பதால் இந்த நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் கொட்டகையில் அடைக்க வேண்டும். கொசுக்களை தவிர்க்க புகைமூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

🐐 நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அரிசி அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பை தவிர்க்கலாம்.

🐐 மேலும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்மூலம் நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories