செம்மறி ஆடு கிடாய் வளர்ப்பு

 
தற்போது அதிக லாபம் தரும் தொழில் ஒன்று ஆடு வளர்ப்பு அதிலும் முக்கியமாக கிடாய்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரபலமாகி வரும் செம்மறி கிடாய் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.
 
இரகங்கள் :
 
ஆடு வளர்க்கும் முன் லாபம் தரும் இரகங்களை தேர்ந்தெடுப்பது லாபம் அடைவதற்கான உத்தியாகும். அதனால் வேகமாக, குறுகிய காலத்தில் எடை அதிகரிக்கும் இரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
கூடூர் வெள்ளை மற்றும் ராமநாதபுரம் சிகப்பு ரக செம்மறி ஆடுகள் பிரபலமானவை. சிகப்பு ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. வட தமிழகத்தில் அதிகமாக வெள்ளை ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் வெள்ளை இரகங்கள் வேகமாக வளர்கின்றன.
 
தீவனம் :
 
புல் வகைகளை மட்டுமே விரும்பி உண்கின்றன. அதனால் செம்மறி ஆடுகளை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இவை வெள்ளாடுகள் போன்று தழைகளை விரும்புவது இல்லை.
 
இதனால் ஓரளவு இயற்கை முறையில் களை கட்டுப்படுத்த முடியும். பகலில் இவற்றால் இடக்கூடிய சாணம் வயலில் உரமாகிறது. மாலையில் வளர்ப்பு புல் வகைகளை அறுவடை செய்து உணவாக கொடுக்கலாம்.
 
அடர்தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலை புண்ணாக்கு, உளுந்து பொட்டு தூள் இவற்றுடன் தாது உப்பு கலவை தகுந்த விகிதத்தில் கலந்து அளிப்பதால் மிக திடமாக வளரும்.
 
குடற்புழு நீக்கம் :
 
3 மாதங்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்து பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் எடை விரைவாக அதிகரிக்கும்.
 
நோய் தடுப்பு :
 
செம்மறி ஆடுகளுக்கு அந்தந்த பருவங்களில் தாக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பு+சிகள் போடவேண்டும். மற்றபடி அதிக எடை விரைவாக வரும்.
 
கொட்டில் பராமரிப்பு :
 
இரவில் தரையில் அரை அடி உயரம் மணல் பரப்பிய கொட்டில்களில் அடைப்பதன் மூலம் நோய்கள் பரவுவது தவிர்க்கலாம். மழை காலங்களில் கொட்டில் ஈரமாகி நோய் தாக்குதலில் இருந்து தடுக்கலாம்.
 
தினமும் செம்மறி ஆடுகளின் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்பு தூள் இரண்டு நாட்கள் ஒருமுறை கொட்டில்களில் தூவ வேண்டும். இதன் மூலமாக நோய்களை தடுக்கலாம்.
 
விற்பனை காலம் :
 
ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யப்படுகிறது.
 
செம்மறி ஆட்டு எரு பயன்கள் :
 
கிடாய்களின் கழிவுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மண் புழு உரத்தில் அதிக நுண்ணுட்டச்சத்துகள் காணப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் நன்கு வளரும். பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
 
மற்ற பயிர்களுக்கு இடும்போது அதன் மகசூல் அளிக்கும் காலம் நீட்டிக்கப்படும். மாடி தோட்டங்களுக்கு சத்தான இயற்கை உரமாக பயன்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories