நெல் விதைகளின் முளைப்புத் திறனை எப்படி அதிக அதிகப்படுத்தலாம்? விதைக்கும் முன்பு என்ன செய்ய வேண்டும்?
விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்க சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விதைப்பின் போது ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் கோழி முட்டையை இட வேண்டும். அப்போது அது தண்ணீரில் மூழ்கிவிடும் பிறகு தண்ணீரில் சிறிது சிறிதாக கல் உப்பை கரைத்து வந்தால் முட்டையானது மிதக்க ஆரம்பிக்கும்.
முட்டையின் மேல் பாகம் அதாவது ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு மேற்பகுதி தெரியும் போது உப்பு கரைப்பதனை நிறுத்திவிட்டு . அதில் நெல் விதைகளை இட்டு பிறகு உப்பு கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். உப்புக் கரைசலில் மூழ்கிய விதைகளை மட்டுமே எடுத்து அவற்றை பலமுறை நல்ல தண்ணீரில் கழுவிய பிறகு விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.
சிவப்பு அரிசியை கொண்ட பாரம்பரிய நெல் ரகம் எது?
பாரம்பரிய நெல் வகைகளில் காட்டு யானம் நெல் சிவப்பு நிற அரிசியை கொண்டது.
இந்த நெல்லை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். இந்த ரக நெல் இயற்கை சீற்றங்களைத் தாங்கி 8 அடி உயரம் வரை வளரும்.
இது 180 நாள் பயிர். மேலும் இந்த நெல் சாகுபடியில் கலைகள் அதிகம் வளர்வதில்லை.
தச காவியாவின் நன்மைகள் என்ன?
தசகாவ்யா சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி பேன்கள் சிலந்திகள் இலைப்புள்ளி சாம்பல் மற்றும் கருகல் நோய்களையும் நன்கு கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
பயிர்களின் வளர்ச்சி மற்றும் சூழலை அதிகரிக்கும்.
கொள்ளு பயிரை எந்த மாதத்தில் விதைப்பு செய்யலாம்? எப்படி விதை நேர்த்தி செய்வது?
கொள்ளு பயிரை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் விதைக்கலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும்.
ரைசோபியம் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகிய உயிரி உரத்தை 400 மில்லி ஆரிய அரிசி கஞ்சியில் கலந்து அதில் 8 கிலோ கொள்ளு விதையை இட்டு பிறகு நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.
பச்சிளம் வெள்ளாட்டு குட்டிகளில் இறப்பை எப்படி தவிர்க்கலாம்?
பச்சிளம் வெள்ளாட்டு குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு .பருவ மாறுதல் ஏற்பட்டு குளிர்காலம் தொடங்கும் நிலையில் வெள்ளாடுகளில் இறப்பு சதவீதம் அதிகரிக்கும்.
எனவே வெள்ளாட்டு குட்டிகள் மற்ற ஆடுகளுடன் கொட்டகையில் அடைத்து வைக்காமல் தனியாக பிரித்து வைப்பது நல்லது .இளம் வெள்ளாடுகளில் இழப்பை தவிர்க்க கவனமாக பராமரிப்பது அவசியம்.