#பரண்மேல்வெள்ளாடு வளர்ப்பு

மேய்ச்சல் நிலம் இல்லாதவர்களும் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறையில் ஆடுகள் வளர்க்கலாம். மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல் வளர்ப்பதால் விவசாயத்திற்க்கு இடையூறாக இருக்காது.
இம்முறையில் ஒரே இடத்தில் தீவனம் உட்கொள்வதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கிறது. அறிவியல் முறையில் பராமரிப்பதால் நோய்தடுப்பு முறை மிகவும்; எளிதாகிறது. அதேபோல பரண்மேல் ஆடு வளர்ப்பு முறையில் குறைந்த இடத்தில் அதிக ஆடுகள் வளர்க்கலாம்.
மேலும் ஆடுகளின் எரு சேமிக்கப்படுவதால் நிலத்திற்க்கு உரமாக பயன்படுத்தலாம் அல்லது நல்ல விலைக்கு விற்ப்பனையும் செய்யலாம்.
வெள்ளாடுகளுக்கு தாது உப்பு கலவை கொடுக்க வேண்டிய அவசியத்தை தெரிந்துகொள்வோமா?
வெள்ளாடுகளுக்கு சில நோய்கள் வராமல் இருக்க தாது உப்பு கலவை கட்டாயம் கொடுக்க வேண்டும். தாது உப்புக்களின் பற்றாகுறையால் ஆடுகளின் எலும்பு வளர்ச்சியின்மை, உடல் வளர்ச்சி குறைபாடு, இனப்பெருக்க குறைபாடு, குறைபாடான குட்டிகள் பிறப்பு போன்ற குறைபாட்டு பிரச்சனைகள் உண்டாகும்.
இதானால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்ப்படும் அதனால் வெள்ளாடுகளுக்கு தாது உப்பு கலவை கொடுக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories