புதிதாக ஆடு வளர்க விருப்பம் உள்ளவர்கள் கடன் உதவி பெறுவது எப்படி?

இப்போதெல்லாம், விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு வணிகமும் மிகவும் லாபகரமானதாக மாறியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சிறிதெனும் முதலிட்டீல், கை நிறைய லாபம் தரும் தொழில் இதுவும் ஒன்றாகும். கால்நடை வளர்ப்பு பற்றி பேசும்போது, ​​அதில் அதிக லாபம் தரும் தோழில் ஆடு வளர்ப்புதான் மற்றும்

இது கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படும் ஒரு தொழிலாக இருந்தாலும், அரசு வழங்கும் மானிய விவரம், தொழிலுக்கான சீறான முறை என்ன என்பதெல்லாம் குறித்து பல கேள்விகள் உள்ளன. மேலும் நகர்ப்புறங்களில் கூட ஆடு வளர்ப்பு போக்கு மிக வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஆடு வளர்ப்பு தொடர்பான கேள்விக்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் உங்களுக்காக இதோ.

புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க, தெரிந்து கொள்ள வேண்டியவை (Things to know to start a new goat farm)
இப்போதெல்லாம் ஆடு வளர்ப்பு பற்றி அனைவருக்கும் தெரியும், மேலும் ஆடு வளர்ப்பு என்பது, நாம் சிறுவயதில் இருந்து பார்க்கும் ஒரு தொழிலாகும். இந்நிலையில், புதிதாக ஆடு வளர்க்க விரும்பும் மக்கள் நிறைய உள்ளனர், ஆனால் நிதி நெருக்கடியால் தொடங்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆடு வளர்ப்பு தொடங்குவதற்கான கடனுதவி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்இதில்

ஆடு வளர்ப்புக்கும் கடன் கிடைக்கும் என்பது வெகு சிலருக்கே தெரியும். எனவே யாரேனும் ஆடு பண்ணை தொடங்க விரும்பினால், கடன் பெறுவது குறித்த முழுமையான தகவல்களை கீழே பெறலாம்.

ஆடு வளர்ப்புக்கு கடன் உதவி (Credit assistance for goat rearing)
ஒரு விவசாயி அல்லது வேலையில்லாத இளைஞர்கள் 20 ஆடுகளை வளர்க்க விரும்பினால், அவர்கள் அரசிடம் கடன் மற்றும் மானியம் பெறலாம். அதற்கு நீங்கள், ஆடு வளர்ப்பு திட்ட அறிக்கையில், ஆடுகளை எங்கு வளர்க்க விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும். ஆடு வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் நிலத்தை சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு விட்டோ பண்ணையை ஆரம்பிக்கலாம். மேலும், ஆடு பண்ணைக்கு எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படும்? ஆட்டு தொழுவத்தை கட்ட எவ்வளவு செலவாகும்? என்பது போன்ற முழுமையான தகவல்களை குறிப்பிட மறவாதீர்கள்.

நபார்டு வங்கியில் இருந்து ஆடு வளர்ப்பு கடனுக்கு செய்ய வேண்டியது
ஆடுவளர்த்தலுக்காக நபார்டு குறிப்பிட்ட கடனை வழங்குகிறது. இந்த கடனின் அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும் தகவலுக்கு, நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். கூடுதலாக, நீங்கள் விலங்குகள் நலத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம். இந்திய அரசும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு 35% வரை மானியம் வழங்குகிறது. வங்கிகளிலும் கடன் வாங்கலாம் என்றார்.

ஆடு வளர்ப்பு கடன் வாங்கு நீங்கள் செய்ய வேண்டியது (All you have to do is buy a goat breeding loan)
ஆடு வளர்ப்புக்கு கடன் பெற, தனி நபர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின், உங்கள் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்குப் பிறகு தனிநபர் மானியம் பெறுவர். அதற்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை, உங்கள் வங்கிகளில் கொடுக்க வேண்டும். மேலும், தனிநபரின் அனைத்து விசாரணைகளையும் நடத்திய பிறகே வங்கி சரியான அளிவிலான கடனை வழங்கும் என்றார்.

ஆடு வளர்ப்பு கடனுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் முறை (Method of preparation of project report for goat breeding loan)
முதலில் ஒரு ஆட்டுக்கு 12 சதுர அடி நிலமும், 20 ஆடுகளுக்கு 240 சதுர அடி நிலமும் தேவை. ஒரு ஆட்டுக்குட்டிக்கு 8 சதுர அடி நிலமும், 40 ஆடுகளுக்கு 320 சதுர அடி இடமும் இருக்க வேண்டும். இவை அனைத்தும், நீங்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories