மழைக்காலம் என்றாலே கால்நடைகளுக்கு அதிக அளவில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .அதிலும் ஒரு சில நோய்கள் ஆடுகளை அதிக அளவில் தாக்குகின்றன .அத்தகைய நோய்களில் ஒன்றான ஆட்டுக் கொள்ளை நோய் பற்றி இங்கு காணலாம்.
ஆட்டுக் கொள்ளைநோய்
ஆட்டு கொள்ளைநோய் மார்பிலி என்ற ஒரு வகை நச்சு உயிர்களால் ஏற்படுகின்றன.
இது ஒரு ஆடுகளுக்கு ஏற்பட்டால் மற்றஆடுகளுக்கும் பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
வெள்ளாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். செம்மறி ஆடுகள் இந்த நோயினால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை.
நோய்க்கான காரணங்கள்
இந்த நோயை ஏற்படுத்தும் நச்சு உயிரிகள் ஆனால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர், படுக்கை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மூலம் இந்த நோய் பரப்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கு ,வாய் ,ஜீரண மண்டலத்தில் இருந்து வெளியேறும் திரவம் ,சா னம் போன்றவற்றில் நச்சுயிரிகள் அதிகமாக காணப்படும்.
முக்கியமாக சாணம் இந்த நோயை ஏற்படுத்தும் நச்சு உயிரியை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதிதாக வாங்கிய நோய் பாதிக்கப்பட்ட ஆட்டின் மூலம் பண்ணைக்குள் இந்த நோய் எளிதில் பரவ வாய்ப்பு உண்டு.
காட்டில் வாழும் அசைபோடும் பிராணிகளும் இந்நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நோய் அறிகுறிகள்
இந்த நோய் தாக்கப்பட்ட ஆ டுகள் அதிக காய்ச்சலுடன் காணப்படும்.
பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோல் உலர்ந்தும், மூக்குக்கு மேல் இருக்கும் தடித்த பகுதி வறண்டும் காணப்படும்.
இந்த நோயினால் ஆடுகள் தீவனம் எடுத்துக்கொள்ளாமல் பசி இன்றி காணப்படும்.
ஆடுகளின் உதடுகள் வாய் உட் ஜவ்வு , ஈறுகள், தாடை உட்பகுதி ,நாக்கு போன்றவற்றில் ஏற்படும் புண்கள் அழுகி துர்நாற்றம் வீசும்.
ஆடுகளுக்கு நுரையீரல் அழற்சி ஏற்படும் ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும் பாதிக்கப்பட்ட ஆ டுகளில் காய்ச்சல் சளி மற்றும் ரத்தம் கலந்து காணப்படும்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானஆ டுகள் நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு விடும் .ஆனால் சில ஆடுகள் இறந்து விடும் வாய்ப்பு இருக்கிறது
கட்டுப்படுத்தும் முறை
ஆட்டு கொள்ளை நோயிலிருந்து பாதிக்கப்பட்ட ஆ டுகளை மற்ற ஆ டுகளிலிருந்து தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும்.
அரிசி, ராகி மற்றும் கம்பு கூழ் தயாரித்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது .அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உடனடியாக ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
நோய் தடுப்பு முறை
ஆடுகளுக்கு முறையான இடைவெளியில் சரியாக தடுப்பூசி அளிக்க வேண்டும் .
புதிதாக வாங்கிய ஆடு களை பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் உடனடியாக சேர்க்காமல் தனியாக பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்.