வெள்ளாடுகளின் வயதை கண்டறிதல்

ஆடுகளின் ஆயுட்காலம் 10-12 வருடங்கள் ஆகும். 5 -7 ஆண்டுகள் வரை பண்ணையில் லாபகரமாக வளர்த்தலாம். ஆடு வளர்ப்போர் ஆடுகளின் பற்களைக் கொண்டு வயதை தீர்மானித்து கீழ்க்கண்ட பயன்களை அடையலாம்.

– ஆடுகளை வாங்கும்போது அதன சரியான வயதைக் கண்டறிந்து இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம்.

– சரியான வயதில் ஆடுகளை விற்பனைக்கு அனுப்பலாம்.

– வயதான மற்றும் உற்பத்தித் திறனற்ற ஆடுகளைக் கண்டறிந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்யலாம்.

– ஆடுகளைக் காப்பீடு செய்வதற்கு வயதை நிர்ணயிப்பது மிக அவசியமாகும்.

ஆடுகளில் வெட்டும் பற்கள், முன் தாடைப் பற்கள் மற்றும் பின் தாடைப் பற்கள் (அரைக்கும் பற்கள்) காணப்படுகிறது. ஆடுகளின் மேல் தாடையில் வெட்டும் பற்கள் காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஈறு மட்டுமே காணப்படும். கீழ் தாடையில் பக்கத்திற்கு 4 வீதம் 8 வெட்டும் பற்கள் காணப்படும். கீழ் தாடையின் உதடுகளை விலக்குவதன் மூலம் இந்த பற்களைக் காணலாம். பொதுவாக வெள்ளாடுகளில் 20 தற்காலிகப் பற்களும், 32 நிரந்தரப் பற்களும் காணப்படும். மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் கீழ்க்கண்டவாறு பற்கள் காணப்படும்.

தற்காலிகப் பற்கள் :

வெட்டும் பற்கள் : 0/8
முன்தாடைப் பற்கள் : 6/6
பின்தாடைப் பற்கள் : 0/0
மொத்தம் : 6/14

நிரந்தரப் பற்கள் :

வெட்டும் பற்கள் : 0/8
முன்தாடைப் பற்கள் : 6/6
பின்தாடைப் பற்கள் : 6/6
மொத்தம் : 12/20

ஆடுகளை வெளியில் இருந்து வாங்கும்போது அதன் பற்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை வைத்துதான் வயதைக் கண்டறிய முடியும் என்றார் .

தற்காலிகப் பற்கள் (அ) பால் பற்கள் :

* சிறியதாக, நீள் செங்குத்தாக இருக்கும்

* பற்களுக்கு இடையில் இடைவெளி இன்றி காணப்படும்.

நிரந்தரப் பற்கள் :

* முன் பகுதி அகன்றும், பின் பகுதி குறுகியும் காணப்படும். வயது அதிகரிக்கும்போது பற்கள் தேய்ந்து முன் பகுதி கூறாக மாறி விடும்.

* ஒரு பல்லிற்கும் அடுத்த பல்லிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் என்றார் .

வயது மற்றும் பற்களின் அமைப்பும் எண்ணிக்கையும் :

பிறந்தவுடன் – 0-2 ஜோடி பால் பற்கள்

6-10 மாதம் – கீழ்த் தாடையின் முன்புறம் 8 முன் பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்

11/2 வயது – நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்

2-21/2 வயது – நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்

3-31/2 வயது – ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்

4 வயது – எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்

6-7 வயது – பற்கள் விழுந்து விடும்என்றார்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories