வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு களுக்கான தீவன வகைகள்

ஆடு வெள்ளாடுகள் பசுந்தழை உலர் தீவனம் கலப்புத் தீவனம் போன்றவற்றை கொடுக்கலாம். மேலும் புளியங்கொட்டை புண்ணாக்கு கடலை புண்ணாக்கு போன்றவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். வேர்க்கடலைக் கொடி, துவரை இலை போன்ற தீவனங்களையும் கொடுக்கலாம்.

உலர் தீவனம்

வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் ஆகவே 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும்.

பசுந்தீவனம்

கோ-3 கோ-4 வேலிமசால் குதிரை மசால் வகைகள் தீவன சோள புல்வகைகள் அகத்தி சித்தகத்தி சவுண்டல் ரகங்களை கொடுக்கலாம்.

அடர் தீவனம்

வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும் மூன்று முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும் 6 மாதம் முதல் 12மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும் சினைப்பருவத்தில் 175 கிராம் ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம் கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.

சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ கடலைப்புண்ணாக்கு 20 கிலோ கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ தாதுஉப்பு 2 கிலோ சாதாரண ஒரு கிலோ என்ற அளவில் 100 கிலோ அளவு தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories