ஊடுபயிர் செய்வதன் நோக்கம் என்ன?
ஊடுபயிர் என்பது சாகுபடி பயிர்களுடன் ஒவ்வொன்றுக்கும் ஏற்பட்ட பயிர்களை விதைப்பதாகும்.
இதில் கூடுதல் வருமானம் கிடைப்பதோடு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
சிறு குறு பெரு விவசாயி என எவ்வாறு பிரிக்கப்படுகின்றது?
புஞ்சை, நஞ்சை நிலத்தின் அளவு கணக்கீட்டின்படி சிறு குறு பெரு விவசாயிகள் பிரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தால் சிறு விவசாயி எனவும் ,2.5 ஏக்கருக்கு மேல் 5 ஏக்கர்க்கு உள் புஞ்சை நிலம் இருந்தால் சிறு விவசாயி எனவும் ,இதுவே 5 ஏக்கர்க்கு மேல் புஞ்சை நிலம் இருந்தால் பெரு விவசாயி எனவும் பிரிக்கப்படுகிறது.
1.25 ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தால் குறு விவசாயி எனவும் ,1.25 ஏக்கருக்கு மேல் 2.5 ஏக்கர்க்கு உள் நஞ்சை நிலம் இருந்தால் சிறு விவசாயி எனவும், 2.5 ஏக்கர்க்கு மேல் நஞ்சை நிலம் இருந்தால் பெரு விவசாயி எனவும் பிரிக்கப்படுகிறது.
மதிப்பூட்டுதல் என்றால் என்ன?
மதிப்பூட்டுதல் என்பது ஒரு விலை பொருளின் வடிவத்தை விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பானதாக மாற்றி ஒரு பொருளின் பொருளாதாரம் மதிப்பையும் ,வாங்குவோரின் ஈர்ப்பையும் கூட்டுவதாகும் . இதனால் வாங்குவோரின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவு செய்யலாம்.
கோழிக்கு அரிசியை கொடுக்கலாமா?
அரிசியை கொடுப்பதால் நமக்கு தீவனச் செலவு மிகவும் குறையும் ஆனால் தொடர்ந்து அரிசி கொடுக்கக் கூடாது ஏனெனில் அதிகப்படியான கொழுப்பு சேர வாய்ப்புள்ளது.
எனவே நாம் அரிசியுடன் கம்பு ,கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை கலந்து நம் நாட்டுக் கோழிகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
கவிப்பு செய்தல் என்றால் என்ன?
கவிப்பு செய்தல் என்பது அங்கக வேளாண் முறையில் ஒரு சில தாவரத்தின் விளைபொருட்களை மூடி பாதுகாப்பது ஆகும். இதற்கு மூடுதல் என்றும் பெயர் உண்டு.
உதாரணமாக வாழைத்தார்,மக்காச்சோளம் போன்றவற்றை கவிப்பு (மூடுதல் ( செய்வதால் பொருட்களின் தன்மை மாறாமலும் பூச்சி, புழு மற்றும் வ ண்டுகளின் தாக்கம் இல்லாமலும் நல்ல பளபளப்பாகவும் பாதுகாக்கலாம்.