சந்தன மரத்தை எந்த நிலத்தில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இடைவெளியில் எத்தனைகன்றுகளை நடவு செய்யலாம்

வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் சந்தன மரத்தை பயிரிடலாம் 8×8 அடி இடைவெளியில் 680 மரங்களையும் 9×9 அடி இடைவெளியில் 537 மரங்களையும் நடவு செய்யலாம்.

சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12 முதல் 14 ஆண்டுகள் ஆகும்.

ரோஜா செடிக்கு என்ன உரம் போடலாம்

ரோஜா பயிரிட்டு இருந்தால் செடி இடைவெளியில் சனா மற்றும் அகத்தியின் கலந்து விதைத்த பிறகு மடக்கி மண் அணைத்து விடலாம். இடைவெளி அதிகமாக இருந்தால் உழுது விடலாம்.

இதனால் செடிகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும் மேலும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் அளிக்கலாம் அல்லது பாசன நீரில் கலந்து விடலாம் நன்றாக வளரும்.

பூச்சிகளை கட்டுப்படுத்த கற்பூர கரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளிக்கலாம் ஒவ்வொரு செடிக்கும் மாதம் ஒரு முறை மண்புழு உரம் அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு 300 கிராம் கலந்து வைக்கலாம்.

மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க என்னென்ன ஆவணங்கள் தேவை

பாஸ்போர்ட் போட்டோ 2, சிட்டா, பட்டா ,அடங்கல் நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ,ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ,தடையின்மை சான்று கூட்டமென்றால் விண்ணப்ப மனு ஆகியவை பண்ணைக்குட்டை அமைக்க தேவையான ஆவணங்கள் ஆகும்.

வெங்காயத்தில் வேர் அழுகல் நோயை எப்படி தடுக்கலாம்

நல்ல வடிகால் வசதியுடைய மேட்டுப்பாங்கான நிலங்களில் வளர்ந்த நோய் தாக்குதல் இல்லாத தரமான வெங்காயத்தையும் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

சூடோமோனஸ் ,டிரைக்கோ டெர்மா விரிடி ஆகிய இரண்டையும் தலா 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டு உழவு செய்யலாம் அல்லது நடவு செய்த 15 நாட்கள் கழித்து இவற்றை தண்ணீரில் கரைத்து தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் நோயை தடுக்கலாம்.

ஈக்களின் தொல்லையில் இருந்து மாடுகளை எவ்வாறு பாதுகாக்கலாம்

மழைக்காலங்களில் மாட்டுத்தொழுவத்தில் ஈக்கள் அதிகமாக காணப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கீழிருந்து 6 இஞ்ச் உயரத்தில் ஈக்கள் உள்ளே போகும் அளவிற்கு சிறிய துளைகள் இடவேண்டும்.

துளைகளுக்குஒரு இன்ச் கீழே வரை நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அதில் 10 முதல் 15 கிராம் அளவில் கருவாட்டு தூ ளைகள் போடவேண்டும்.

பிறகு பாட்டிலையும் மூடி ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

ஈக்கள் அந்த சிறிய துளையில் உள்ளே சென்று வெளியே வர முடியாமல் இறந்துவிடும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories