கோடை உழவு செய்த நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும், பின்னர் கொக்கிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும்.
பிறகு பார் கலப்பை பயன்படுத்தி 60 சென்டிமீட்டர் இடைவெளியில் மண்ணின் சரிமானம் மற்றும் பாசன மூலத்திற்கு ஏற்ப பாத்தின் நிலத்தை நிர்ணயித்து பார்கள் அமைக்கவேண்டும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
நிலக்கடலையை தாக்கும் ப்ரோனிய புழுவை எப்படி இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்?
நிலக்கடலையை தாக்கும் ப்ரோனிய புழுவை இனக்கவர்ச்சி பொறி வைத்தும் ஆமணக்கை பொறிப் பயிராக வரப்புகளில் வளர்த்து புரோனிய புழுவின் முட்டைக் குவியல்களையும் ஆமணக்கு இலைகளில் இருந்தும் சேகரித்து அழிக்கலாம்.
பருத்தி உடன் என்ன சாகுபடி செய்யலாம் ?எப்படி செய்யலாம்?
பருத்தி மட்டுமே சாகுபடி செய்யாமல் அதனுடன் துவரை, வெண்டை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை சேர்த்து சாகுபடி செய்யலாம்.
துவரையை ஓர பயிராகவும், வெண்டை ,தட்டைப்பயிரை பொறி பயிராகவும் ,வளர்த்தால் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பருத்தியை பாதுகாக்கலாம்.
அருகம்புல்லை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும் .இதனை கட்டுப்படுத்த அருகம்புல்லை மூன்று வருடங்கள் வரை நிலத்திலேயே விட்டுவிட வேண்டும்.
பிறகு பசுந்தாள் உரச் செடிகளை சணப்பு,கொழிஞ்சி விதைத்து பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால் கலைகள் குறையும்.
இறைச்சிக்கான மீன் வளர்ப்பபில் எந்த மீன் அதிக லாபம் தரக்கூடிய?
10 சென்ட் நிலத்தில் இறைச்சிக்கு பயன்படுத்தும் மீன்களை வளர்க்கலாம். ரோகு ,கட்லா ,சில்வர் கெண்டை போன்ற மீன்களை வளர்க்கலாம்.
கட்லாமற்றும் ரோகு ஆகியவை நுகர்வோர் அதிகம் வெறும் விரும்பும் மீன் வகைகள். சில்வர் கெண்டை கட்லா மற்றும் ரோகுவை விட இரு மடங்கு மகசூல் கொடுக்கிறது.