வேலையாட்களின் பற்றாக்குறையை சமாளிக்க களையெடுக்கும் கருவி பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்தி வரிசை பயிர்களில் கலைஎடுக்கலாம்.
இக்கருவி இயக்கும் ஆட்கள் நின்ற நிலையிலேயே கலை எடுப்பதற்கு வசதியாக நீண்ட கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளி செல்வதற்கு ஏற்றஉருளையின் கைப்பிடியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளைகளை பொருத்தி பயன்படுத்த வேண்டும் .கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும்போது கத்தி மண்ணுக்குள் சென்று களைச் செடிகளை வெட்டுகிறது. இக்கருவியை பயன்படுத்த மண்ணின் ஈரப்பதம் 10 சதவீதம் இருக்க வேண்டும்.