#பஞ்சகவ்யாவின் மூலம் வாழை சாகுபடியை வாழையடி வாழையாக வளர்ச்சியாக்கும் விவசாயி
என்னுடைய பெயர் ரிக்சன் நான் பி.ஏ. ஆங்கிலம் படித்துவிட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை வேலையும் கிடைக்கவில்லை வேலை கிடைத்தாலும் பணம் என்னால் கட்ட முடியாது.
வேலையில்லாமல் வெட்டியாக சுற்றுவதை விட்டுவிட்டு எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது அவற்றில் தென்னை வைத்தோம் அதற்குள் ஊடுபயிராக வாழை நடவு செய்துள்ளேன்.
அந்த வாழைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது
தற்பொழு வாழை சாகுபடி செய்து 7 மாதங்கள் ஆகிறது தண்ணீர் பற்றாக்குறையில் வாழை மரம் அப்படியே காய்ந்து விடுமோ என்று சோர்ந்த நிலையில் இருந்த நேரத்தில் பஞ்சகவ்யா தயார் செய்து ஊற்றி வந்தால் வாழை நன்றாக வறட்சியையும் தாங்கி வளரும்.
விரைவாக தார் போட ஆரம்பிக்கும் சீப்பு கூடுதலாகவும் போடும் காய் திறட்சியாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும். நோய், பூச்சி அதிகம் தாக்க வாய்ப்பில்லை என்று இயற்கை விவசாயி ஒருவர் RSGA முகநூலில் போட்டுள்ளார்கள் அவற்றை பார்க்கலாம் என்று எனக்கு காண்பித்தார்கள்.
அது மட்டுமல்லாம் கிட்டம்பட்டியில் உள்ள விவசாய அலுவலகத்திலிருந்து வாங்கி பயன்படுத்திய விவசாயி சொன்னதன் பேரில் தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்டு நான் சொந்தமாக தயாரித்து என்னுடைய வயலுக்கு பயன்படுத்தி வருகிறேன்.
என்னுடைய வாழை மரம் நன்றாக இருக்கிறது. நோய் தாக்குதலும் இல்லை வடாமல் நன்றாக செழுமையுடன் காணப்படுகிறது
தண்ணீர் பாயும் சமையமெல்லாம் ஒரு லிடடர் தண்ணீருக்கு 25 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்த வாழை மரத்தைச் சுற்றி ஊற்றி வருகிறேன்
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மற்ற விவசாயிகளும் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்
என்ற எண்ணத்தில் தங்களுககு தெரியப்படுத்துகிறேன்
விவசாயம் செய்து சாதனை படைத்து சரித்திரத்தில் இடம் பிடிக்காவிட்டாலும் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ இது ஒரு நல்ல வாய்ப்பு
முக்கனிகளுள் முதன்மைக்கனி வாழை என்கிறார்கள் அவற்றை விவசாயிகளாகிய நாம் செயல்படுத்தி முதன்மைக்கனியாக கொண்டுவர முன் வருவோம்.
வாழை சாகுபடிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா பயிர்களுக்கும் பஞ்சகவ்யா பயன்படுத்தலாம் பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் பஞ்சகவ்யாவில் கிடைக்கும்
பஞ்சகவ்யா தயாரிக்க முடியாத விவசாயிகளுக்கு தயாரித்து குறைந்த செலவில் கொடுத்தும் வருகிறேன்