வெள்ளாட்டுப் பாலில் அப்படி என்ன சிறப்புகள் அடங்கியிருக்கு? இதை வாசிங்க தெரியும்..

வெள்ளாட்டுப் பாலின் சிறப்புகள்

** வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையுடைதால், தாய்பாலுக்கு அடுத்த சிறப்புடையது.

** வெள்ளாட்டுப் பாலின் புரத வேறுபாடு காரணமாக வெள்ளாட்டுப் பாலினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுவதில்லை.

** பல குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கும்போது ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டமும், பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வெள்ளாட்டுப் பால் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது.

** வெள்ளாட்டுப்பால் தேவைப்படும்போது குழந்தைகளுக்குக் கறந்து கொடுக்கலாம். வெள்ளாடுகளில் எப்போது வேண்டுமானாலும் பால் கறந்து கொள்ள முடியும்.

** குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் அருமருந்து போன்றது.

** வெள்ளாட்டுப் பாலால் காச நோய்ப் பிரச்சனை கிடையாது. பொதுவாக வெள்ளாடு காச நோயால் தாக்கப்படுவதில்லை.

** வெள்ளாட்டுப்பால் கொழுப்புக் கோளங்கள் சிறியனவாதலால் விரைவில் கெட்டு விடக் கூடியது. ஆகவே விரைந்து பயன்படுத்த வேண்டும். அல்லது காய்ச்சிச் சேமிக்க வேண்டும்.

** மேலும் புருசெல்லோசிஸ் என்னும் நோய்க் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சிக் குடிப்பது நல்லது.

** ஏழைகளின் புரதப் பற்றாக் குறையை வெள்ளாட்டுப் பால் தீர்க்கும் ஒரு கருவியாக உள்ளது.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories