வேளாண்மை செய்திகள்!

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு 45 கிலோ எடை உள்ள ஒரு மூட்டைக்கு ரூபாய் 2500 வரை விலை கிடைக்கிறது இதனால் விவசாயிகள் உருளைக்கிழங்கு விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்தக் கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் ஊ ட்டியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு நீலகிரி கூட்டுப் பண்ணையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் இதை உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது கோலார் ஜோதி ரக உருளைக்கிழங்குகள் கர்நாடகம் மாநிலம் கோலாரில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து தரமான விற்பனை செய்யப்படுகிறது இது ஒரே ரகமான விதை விற்பனை செய்யப்படுகிறது இதை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் தற்போது 40 டன் விதை உருளைக்கிழங்கு இருப்பு உள்ளது 48 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என குளிர்பதன கிடங்கு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி வட்டாரத்தில் நடப்பாண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசனமாக உள்ள நிலத்தில் சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக அவற்றை நீக்குதல் மற்றும் சமன் செய்தல் மூலம் சிறுதானியங்கள் அந்த நிலத்தில் சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டருக்கு ரூபாய் 10,000 வரை அரசு மானியமாக வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது சேடப்பட்டி வட்டாரத்தில் தற்போது 25 ஏக்கர் பரப்பளவில் விட்டுட்டு பின் இத்திட்டம் நடைபெறுவதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற சிறு தானியங்கள் பயிர் செய்வதற்கு வேண்டிய விதைகள் உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் வேளாண்மை துறை மூலமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் மூலம் தரிசு நிலத்தில் சாகுபடி நிலமாக மாற்ற விரும்பும் சேடப்பட்டி வட்டார வேளாண்மை விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலகங்களை உடனடியாக தொடர்பு கொண்டு மேலும் விபரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories