10 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தில் மஞ்சள் விலை- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமையல், அழகு, ஆரோக்கியம், மருத்துவம் என பல வகைகளில் நமக்குப் பலனளிக்கக்கூடியது மஞ்சள். இந்த மஞ்சள் 10 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல விலையேற்றத்தைக் கொடுத்து மஞ்சள் வியாபாரிகளுக்கு மனமகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்.

ரூ.10,000த்தைத் தாண்டியது (Exceeds Rs.10,000)
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள் விலை குவிண்டால் 10 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது மற்றும்

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமை யாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில் :

விலைஉயர வாய்ப்பு (Pricey opportunity)

ஈரோடு மஞ்சள் சந்தையில், 10 ஆண்டுக்குப்பின் ஒரு குவிண்டால், ரூ.10 ஆயிரமுக்கு மேல் விற்பனையானது. சில தினங்களுக்கு முன் நடை பெற்ற சந்தையில் விலை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

மே மாதம் வரை நீடிக்கும் (Lasts until May)

ஈரோடு சந்தைக்கு கர்நாடகா மஞ்சள், தர்மபுரி மஞ்சளும் வரத்தாகிறது. இந்த மஞ்சள் வரத்து வருகிற மே மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரத்து குறைவு (Low supply)

அதேநேரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் பஸ்மத், நாம்தேட் சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதாலும், தரம் குறைவாக இருப்ப தாலும், விலை உயர வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
.
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த விலையேற்றம், மஞ்சள் பயிரிட்ட வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories