அமிர்த கரைசல் பொதுவாக நிலவறை ஊக்கி என்று அழைப்பார்கள்.
தேவையான பொருட்கள்
நாட்டு பசு சாணம் 1o கிலோ
நாட்டு பசு பசு கோமியம் 10 லிட்டர்
கருப்பட்டி 250 கிராம்
தண்ணீர் 200 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் சாணம் மற்றும் நாட்டு பசு கோமியம் இவற்றை ஒரு வாளியில் அல்லது ஏதாவது ஒரு கலனி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலை அமிர்த கரைசல் ஆகும்.