அரப்பு இலை சேர்த்த மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சித்தாக்குதல் வெகுவாகக் குறையும். இது தவிர வளர்ச்சிக்கும் உதவும் பூஞ்சாண நோய்களும் அண்டாது.
அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி பெருகி பூக்கள் அதிகம் கிடைக்கும். இக்கரைசலை உள்ள வளர்ச்சி ஊக்கிகள் காரணமாக மகசூல் அதிகரிக்கும்.
என்ன மண் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது
மணல் கலந்த வண்டல் மண்ணில் இருந்து களிமண் வண்டல் மண் வரை அனைத்து மண் வகைகளும் வளர்ச்சிக்கு ஏற்றது.
அவரை அதிகமாக அசுவினி பூச்சி தாக்குகிறது அதற்கு என்ன காரணம்
100 லிட்டர் நீரில் 600 லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் மூன்று கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 3 முறை தெளிக்கலாம் இவற்றை தெளிப்பதன்மூலம் அவரையில் அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளத்தில் தண்டு புழுவை கட்டுப்படுத்துவது எப்படி
அவரை மற்றும் தட்டை பயிரை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தண்டு துளைப்பான் பாதிப்பை குறைக்கலாம்.
விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
100 லிட்டர் நீரில்2 1\2 லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் தெளிப்பதன் மூலம்கட்டுப்படுத்தலாம்.