அரப்பு மோர்க் கரைசல்! 

அரப்பு மோர்க் கரைசல்! 

“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசலைப் பத்திச் சொல்லுண்ணே..”

“அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுகிறது..”

“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..”

“நன்கு புளித்த மோர் 5 லிட்டர், இளநீர் ஒரு லிட்டர், அரப்பாகப் பயன்படும் உசிலைத் தழை 1-2 கிலோ, பழங்கள் அரை கிலோ..”

“சரிண்ணே.. எப்பிடித் தயாரிக்கிறதுன்னு சொல்லுண்ணே?..”

“புளித்த மோரையும் இளநீரையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, பழங்களையும், இடித்த உசிலைத் தழைகளையும் நைலான் வலையில் போட்டுக் கட்டி, மோர் இளநீர்க் கலவைக்குள் வைத்து, ஏழு நாட்களுக்குப் புளிக்க விட்டால் அரப்பு மோர்க் கரைசல் தயாராகி விடும்..”

“இதை எப்பிடிப் பயன்படுத்துறதுன்னு சொல்லுண்ணே..”

“இந்தக் கரைசலை வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்னுமளவில் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் பயிர்களுக்குத் தெளிக்கலாம்..”

“சரிண்ணே.. இதனால என்ன நன்மைண்ணே?..”

“அரப்பு மோர்க் கரைசல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. பயிர்களைத் தாக்க விடாமல் பூச்சிகளை விரட்டுகிறது.. பூசண நோய்களைத் தாங்கி வளரும் ஆற்றலைப் பயிர்களுக்கு அளிக்கிறது..”

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories