உரங்களிலும் கவனம் தேவை

 

உரங்களிலும் கவனம் தேவை

விவசாயத்தில் உரம் என்பது ஒரு இன்றியமையாத பொருளாகும் .அப்படிப்பட்ட உரங்கள் பயிர் வளர்ச்சிக்கும் மண்ணின் வளத்தை பாதுகாக்கவும் பயன்படுகின்றது. அத்தகைய உரத்தை கையாளுவதில் விவசாயிகள் கவனம் கொள்ள வேண்டும். ஏனெனில் போலி உரங்கள் விற்பனை செய்யப்படலாம் .போலி உரங்களைஎப்படி கண்டறிவது?

பொதுவாக உண்மையான உரம் கடினமாக இருக்கும். அதாவது எளிதில் உடையாது.

போலி உரத்தின்விலை விளைவு

போலி உரம் பயன்படுத்தினால் மண்ணுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல், விளைச்சல் குறையும்.

மேலும் மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படும்.

நடவடிக்கை

போலி உரங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சில விதிமுறைகள் விற்பனை நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவை

உர விற்பனை நிலையங்களில் உரங்களை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டியது அவசியமாகும் அனுமதி பெறாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு உர விற்பனைவிற்பனை நிலையங்களில் விற்பனை கருவி மூலம் உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.

உர விலை மற்றும் ஒரு இருப்பு விபரத்தினை விவசாயிகளின் பார்வையில் படுமாறு அனைத்து உரை கடைகளிலும் வைத்திருக்க வேண்டும்.

விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்கு செல்லும் போது அவர்களது ஆதார் அட்டையை கொண்டு சென்று உரம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் உரங்களை வாங்கும் போதும் அதை பயன்படுத்தும் போதும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மண் பரிசோதனையில் நீர் பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உரமிட்டால் அதிக பயன் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories