வேளாண் நிலங்களில் தண்ணீர் புல் , கோரைப்புல், நெய்வேலி காட்டாமணி ,பார்த்தீனியம் போன்ற களைச் செடிகளின் வளர்ச்சி பாதித்து மகசூல் குறைகிறது.
மேலும் ஆகாய தாமரை போன்ற களைச்செடிகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மாசுபட செய்கின்றது. இத்தகைய களைச் செடிகளை அகற்றி மக்கச் செய்து கம்போஸ்ட் ஆக்கி இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
இயற்கை உரம் தயாரிப்பதற்கு களைகள் ஒரு டன் காளான் ஒரு கிலோ ஆகியவை தேவையான பொருட்கள் ஆகும்.
துண்டுகள்
முதலில் களைச்செடிகளை ஏழு சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் வரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இடம் தேர்வு
கம்போஸ்ட் தாவரத்திற்கு நல்ல உரமான வடிகால் வசதியுள்ள நிழலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அந்த இடத்தில் 1.5 மீட்டர் அகலம் ஒரு மீட்டர் உயரம் அல்லது ஆழம் உடைய குழி அல்லது குவியல் அமைக்க வேண்டும்.
புளூ ரோட்டஸ் காளான்
நறுக்கப்பட்ட களை துண்டுகளை ஒரு சென்டிமீட்டர் வரை பரப்பி விட வேண்டும் .இதன் மேல் 200 கிராம் புளூ ரோட்டஸ் காளானை தூவவேண்டும் .இதன் பிறகு மறுபடியும் காலை கரித்துண்டுகளை 10 சென்டிமீட்டர் அளவில் பரப்ப வேண்டும்.
இதே போல பத்து அடுக்குகள் வரை மாற்றி மாற்றி அமைத்த பிறகு நன்கு தண்ணீர் தெளித்து ஈரப்பதமாக வைத்து அதன்மேல் களிமண் கொண்டு பூசவேண்டும். 20 நாட்களுக்கு பிறகு கம்போஸ்ட் நன்றாக கிளறி விட வேண்டும். 45 நாட்களுக்கு பிறகு நன்கு மக்கிய கம்போஸ்ட் பயிர்களுக்கு இடுவதற்கு ஏற்றவகையில் தயாராகிவிடும்.