ஜீவாமிர்தத்தில் செழிக்கும் விவசாயப் பெண்

இயற்கையை உற்றுப்பாருங்கள் ; அது மனிதருக்கு விவசாயம் என்ற பாடத்தை கற்றுத்தருகிறது ,” என்பது நம்மாழ்வாரின் கூற்று. அவர் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, சிவகங்கை அருகே பனையூரில் எம்.பில்., பட்டதாரி பெண் பி.ஜெயலட்சுமி, இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கிறார் அவர் .

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த இவர், சிவகங்கையில் 2.69 ஏக்கரில் சொட்டு நீர் பாசன முறையில் சம்பங்கி பூக்கள் சாகுபடி, பாரம்பரிய நெல் ரகமான பூங்கன், சீரக சம்பா நெல் சாகுபடி, மூலிகை செடிகளால் வேலி, அத்தி, முலாம்பழம், பலா, நாட்டு கொய்யா, நாவல், மாதுளை, நொச்சி உட்பட 600 பலன் தரும் மரக்கன்றுகளை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்த்து வருகிறார் அவர் .

 

இவரது தோட்டத்து எல்கையில் வலையை வேலியாக்கி, வேலியில் கற்றாழை, நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகளை வளர்க்கிறார்.

அவர் கூறியதாவது: சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றினை 200 லிட்டர் தண்ணீரில் நொதிக்க செய்து, ஜீவாமிர்தம் என்ற இயற்கை உரம் தயாரித்து, பயிர்களுக்கு உரமாக இடுகிறேன். பூச்செடி, பழமரக்கன்றுகளுக்கு நடுவே விளையும் களைகளை எடுப்பதே இல்லை. செடி, கன்றுகளுக்கு அடியில் கரும்பு சக்கை, பெரிய புல்களை அறுத்துபோட்டு அவற்றை மக்க செய்கிறேன். அந்த இடத்தில் களை வளர்வதே இல்லை. மக்கும் கரும்பு சக்கை, புற்களும் அச்செடிகளுக்கு உரமாக மாறுகிறது .

இயற்கை விவசாயத்தில் தொடர்ந்து குறைந்த செலவில், நல்ல வருவாய் ஈட்டி வருகிறேன். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது. கிணற்றில் 40 அடி ஆழத்தில் பாசன வசதி பெறுகிறேன். இப்பகுதியை விவசாயத்திற்கேற்ற ‘கெடா மண்’ பனையூர் என்பார்கள். செயற்கை உரங்கள் மூலம் சம்மங்கி பூ சாகுபடி செய்த விவசாயிகள், 2 ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ பூக்கள் மட்டுமே வருவதாக கூறுகின்றனர். ஆனால், இயற்கை விவசாயம் மூலம் 30 சென்ட் நிலத்தில் தினமும் 8 கிலோ சம்பங்கி பூக்கள் அறுவடை செய்கிறேன் என்றார் . லாப நோக்குடன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது. நமக்கான உணவு பொருளை நாமே தயாரிக்க வேண்டும் என்ற நோக்குடன் விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டும், என்றார். எண் :9585198135.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories