ஜீவாமிர்தம் தயாரித்தல்!

இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் சவாலானது என்றார்.

ஜீவாமிர்தம் (Jivamirtham)
அப்படியானால், நோய்களில் இருந்து அனைத்துப் பயிர்களையும் பாதுகாக்க, நோய்களை அண்டவிடாமல் விரட்டக்கூடிய ஒரே மருந்து எதுவென்றால், ஜீவாமிர்தம் தான்.

ஜீவாமிர்தத்தின் நன்மைகள் (Benefits of Jivamirtha)
ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

ஜீவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது.

அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக ஜீவாமிர்தம் மாற்றிவிடுகின்றது.

நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஜீவாமிர்தம் பல மடங்கு அதிகரிக்கிறது.

தயாரிக்கத் தேவையான பொருட்கள் (Ingredients)
நாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ
அல்லது நாட்டு பசுஞ்சாணம் மற்றும் நாட்டுக் காளை மாட்டுச்சாணம் என இரண்டையும் தலா 5 கிலோ எடுத்துக்கொள்ளலாம்.

இதில் நாட்டுக் காளை மாட்டுச்சாணத்திற்கு பதிலாக நாட்டு எருமை மாட்டுச்சாணம் சேர்த்தாலும் பரவாயில்லை.

நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர்

(இதிலும் விருப்பத்தேர்வு செய்துகொள்ளலாம்)

வெல்லம் – 2 கிலோ
அல்லது
கரும்புச்சாறு – 4 லிட்டர்
இருவிதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ

அதாவது தட்டைப்பயறு, துவரை, கொள்ளு, கொண்டைக்கடலை, உளுந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முளைக்கட்டச் செய்து அரைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

பண்ணைகளின் வரப்பில் இருந்து எடுக்கப்பட்ட காட்டின் ஜீவனுள்ள மண் – கையளவு
தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு (Preparation)
இவை அனைத்தையும் தொட்டியில் விட்டுக்கலக்க வேண்டும். தினமும் 3 முறை என 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கிவிட வேண்டும்.

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர்க் கலவைதான் ஜீவாமிர்தம் என்றார்.

பயன்படுத்தும் முறை (Method of use)
ஜீவாமிர்தத்தை எல்லா வகைப் பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories