டிரைக்கோடெர்மாவிரிடியை நிலத்திற்க்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை

டிரைக்கோடெர்மாவிரிடியை நிலத்திற்க்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை
டிரைக்கோடெர்ம்h விரிடி நன்மை செய்யும் பச்சை நிற éஞ்சானமாகும். பயிர்களில் மண் மற்றும் விதையின் மேல்புறம் பரவும் நோயிகளை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சானக் கொல்லியாகும்.
இது வேர்களுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. டிரைக்கோடெர்மா விரிடி பயிர்களில் உண்டாகும் வேர் அழுகல், கிழங்கு அழுகல், மற்றும் வாடல் நோய் போன்ற நோய்கள் வராமல் காக்கின்றது.
டிரைக்கோடர்மா விரிடியை எந்த பயிருக்கு எப்படி பயன்படுத்துவதுஎன்று தெரிந்து கொள்ளலாம்
டிரைக்கோடெர்மா விரிடியை காய்கறிகள், பழவகைகள், தானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மலைப்பயிர்கள், பூச்செடிகள் மற்றும் கொடி வகைகள் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
டிரைக்கோடெர்மா விரிடியை 1 லோடு மக்கிய இயற்க உரத்துடன் கலந்து 10 – 15 நாட்கள் நிழலில் வைத்து பிறகு அடியுரமாக நிலத்தில் இடவேண்டும். அதேபோல விதைநேர்த்தி, கிழங்கு நேர்த்தி மற்றும் நாற்று நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்,
முக்கிய குறிப்பு என்ன வென்றால் விரிடியை பயன்படுத்தும் போது ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது பின்போ இரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories