திராட்சையில் அதிக மகசூல் பெற என்ன செய்யலாம்?

திராட்சைக்கு கடலை புண்ணாக்கை உறவைத்து கரைத்து வைத்த கரைசலை ஒரு குழிக்கு ஒரு வாளி என்ற அளவில் ஊற்றினால் நல்ல தரமான திராட்சையில் அதிக மகசூலை பெறலாம்.

மழைக் காலத்திற்கு முன்பு ஒவ்வொரு திராட்சை கொடியை சுற்றி வட்ட வடிவ குழி தோண்டி அதில் பசுந்தாள் உரச் செடி மற்றும் தொழு உரத்தை 3:1 எளிதில் விட்டு இட்டு மண் கொண்டு மூடினாள் நல்ல மகசூல் பெறலாம்.

தென்னையில்சுருள் வெள்ளை ஈ தாக்குதலை எப்படி தடுப்பது?

வெள்ளை ஈக்களை கவருவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறிகளை தென்னை மரங்களில் கட்டி தொங்கவிட வேண்டும்.

தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும் ஒட்டுண்ணிகளை தோட்டங்களில் விட வேண்டும்.

பொன்னீம் கரைசல் எப்படி தயாரிப்பது?

பொன்னீம் கரைசல் தயாரிக்க வேப்ப எண்ணெய் 450 மில்லி தேங்காய் எண்ணெயை 450 மில்லி சோப்புக் கரைசல் 100 மிலி தேவைப்படும்.

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் கிடைக்கும் கலவையை பொன்னீம் கரைசல் ஆகும். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 லிருந்து 100 மில்லி வரை பயன்படுத்த வேண்டும்.

வெங்காய விதைகளை எப்படி நடவு செய்வது?
வெங்காய நாற்று உற்பத்தி ஒரு சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து 2oo கிலோ வரை மக்கிய தொழு உரம் இட்டு நல்ல தரமான விதைகளை மாற்றிவிட வேண்டும் கிடைத்த 35 முதல் 40 நாட் நாற்றுகள் நடவிற்கு தயாராகிவிடுகிறது

நாற்றுகளை பிடுங்கி எடுத்து 20 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து நடப்பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி பத்து சென்டிமீட்டர் இடைவெளிகளில் நாற்றுக்களை நடவேண்டும்.

ஆடுகளுக்கு மழைக்காலங்களில் பசுந்தீவன தேவையை எப்படி பூர்த்தி செய்வது?

வளரும் ஆடுகளின் கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல் தேவையான தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

மழைக்கு முன்பு நரிப்பயறு சணப்பு குதிரை மசால் காயவைத்து தீவனமாக அளிக்கலாம்

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories