தொல்லுயிரி

காற்றில்லாத இடத்தில் வாழும் ஒரு வகை உயிரிகள் தொல்லுயிரிடு என்று அழைக்கப்படுகிறது.

200 லிட்டர் கொள்ளளவுள்ள ஒரு தொட்டியில் கரைசல் அகற்றுவதற்கான ஒரு குழாய் அமைப்பையும் தொல்லுயிரியல்வடித்து எடுப்பதற்கான குழாய்ஒன்றையும் கலணை தேவைப்படும்போது தூய்மை செய்ய வெளியேற்றும் குழாய் ஒன்றையும் களத்தில் மேல் புறம் காற்று போக்கி ஒன்றையும் காற்று புகாத வண்ணம் அமைக்க வேண்டும்.

சாண எரிவாயு கலன் கழிவு 25 லிட்டர் மற்றும் நீர் 75 லிட்டர் இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது 50 கிலோ சாணம் மற்றும் 100 லிட்டர் நீர் ஆகியவற்றை கலக்கி கொள்ளவும்.

இதில் ஏதாவது ஒரு கலவையை இடு குழாய் வழியாக ஊற்றவேண்டும். பிறகு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு கலனில் 20 லிட்டர் நீர் 100 கிராம் 3 கிலோ பனங்கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம் மற்றும் 250 மில்லி விளக்கெண்ணை ஆகியவற்றை கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 15 நிமிடம் இடைவெளி விட்டு இதைகலனில்விட வேண்டும். 3 மணி நேரத்தில் விளக்கெண்ணை நன்றாக கரைந்துவிடும்.பிறகு 200 லிட்டர் கலந்து இந்த கலவையை ஊற்ற வேண்டும். 200 லிட்டர் கலன் முழுவதும் விரும்பாவிட்டால் மேலும் கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டும் .இவ்வாரம் முழுவதும் ஊற்றிய பிறகு 7 நாள் கழித்து தொல்லுயிரியல் பெரிதும் பெருகியிருக்கும் .இந்த கலவையை ஒரு லிட்டருக்கு நான்கு லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் அல்லது தண்ணீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் ஊற்றி விடலாம். இதனால் செடிகள் நன்கு வளர்ச்சி அடையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories