நெல் சாகுபடியில் இயற்கை உரமான பசுந்தாள் உரத்தை இப்படித்தான் இடணும்..

தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்டடுகிறது. இப்பருவத்தில் மத்திய மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

மண் பரிசோதனை அடிப்படையில் பயிருக்கு உரமிடல் நன்று. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் மத்திய மற்றும் நீண்டகால ரகங்களுக்கு எக்டேருக்கு 150கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் சில மத்திய கால நெல் வகைகளுக்கு அதிக அளவில் தழைச்சத்து இட்டால் அவை அதிகம் வளர்ந்து பூக்கும் பருவத்திலோ அல்லது பால் பிடிக்கும் பருவத்திலோ சாய்ந்துவிடுவதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நெல் ரகங்களின் தன்மையை அறிந்து தழைச்சத்தினை இடுதல் மிகவும் அவசியமாகும்.

இயற்கை உரங்கள்:

இயற்கை உரங்களை இடுவதால் நெல்லில் நல்ல பயனை அடையலாம். பண்ணை மரங்களான புங்கம், கிளிரிசிடியா, வேம்பு போன்றவற்றில் நல்ல தழை உரம் கிடைத்தாலும், அவற்றை வெட்டி எடுத்துச்சென்று வயலில் இடுவதற்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறது.

ஆகவே கோடை கால மற்றும் தென்மேற்குப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கும். மழையைக் கொண்டும், கிணற்றுப்பாசன வசதியுள்ள இடங்களிலும் பசுந்தாள் பயிரைப் பயிரிட்டு அவற்றை அதே நிலத்தில் மடக்கி உழுது நெல் பயிரிடலாம்.

30 முதல் 45 நாட்களில் நன்கு வளர்ந்து அதிக தழைச்சத்தினை கொடுக்கவல்ல பசுந்தாள் பயிர்களைத்தேர்வு செய்து பயிரிடவேண்டும். இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது. தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி மற்றும் கொளஞ்சி முதலான பசுந்தாள் பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடவேண்டும்.

இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது. தக்கைப்பூண்டு , மணிலா அகத்தி மற்றும் கொளுஞ்சி முதலான பசுந்தாள் உரப்பயிர்கள் சம்பா பருவ நெல்லிற்கு ஏற்றவை.

பசுந்தாள் உரமிடும் முறை:

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட நாட்களுக்கு (60 நாட்கள்) வளர்ந்தால் அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரம் நார்த்தன்மை பெற்று மக்கும் தன்மை குறைகிறது. அதிகம் வளர்ந்த பயிரை ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு எடுத்துச் சென்று வயலில் இட அதிக ஆட்கள் தேவைப்படுவதால் சிரமம் அதிகமாகிறது. மேலும் நன்கு வளர்ந்த அதிகப்படியான பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்குவது சிரமமாகும்.

தக்கைப்பூண்டு மற்றும் மணிலா அகத்தி முதலியன குறைந்த நாட்களில் நல்ல தழை உரத்தினைக் கொடுக்கவல்லன. மழை, கிணறு மற்றும் கால்வாய் பாசனம் குறைந்த 30-35 நாட்களில் எக்டேருக்கு 7 முதல் 8 டன் தழை உரத்தினை எளிதாகப் பெற முடியும்.

கொளுஞ்சி வறட்சியைத்தாங்கி வளர்ந்து நீண்ட நாட்களுக்கு பசுமையாக இருப்பதால் குறைவான நீர்ப்பாசன மூலம் வசதி மற்றும் குறைந்த பகுதியில் கோடையில் பயிரிட்டு சம்பா நெல்லிற்குப் பயன்படுத்தாலாம்.

பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்கி 5 முதல் 7 நாட்கள் கழித்து நெல் நடவு செய்ய வேண்டும். நெல்லிற்கு எக்டேருக்கு 6.25 டன் பசுந்தாள் உரத்தின் அளவை எக்டேருக்கு 6.25 டன் பசுந்தாள் உரம் பரிந்துரைக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories