பயிருக்கு தழைச்சத்து தரும் அசைவ மருந்து! புதிய முயற்சி!

அங்கக விவசாயம் எனப்படும் இயற்கை விவசாயத்தின் மிக முக்கிய சவாலே உரங்கள் மற்றும் இயற்கை மருந்துகள்தான். அவ்வாறு பல இயற்கை மருந்துகள் இருந்தாலும், பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்தை அளிக்க துரித வளர்ச்சிக்கு வித்திடும் அசைவ மருந்து எது தெரியுமா? அதுதான் மீன் அமிலம்.

தேவையான பொருட்கள்
மீன் கழிவு 5 கிலோ
நாட்டுச்சர்க்கரை 5 கிலோ

தயாரிப்பு முறை (Prepartion)
ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். இதனைக் காற்றுப் புகாதவாறு இறுக்கமாக மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும்.

அளவு (Quantity)
இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் என்றார்.

பருவம் (Season)
பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம்.

மீன் அமிலத்தின் பயன்கள் (Benefits)
பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது எனவே,

பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்க செய்யும் தரமான காய்கறிகளை விளைவிக்க வித்திடுகிறது.

பயிர்கள் ஒரே சீராக செழித்து வளரும்.

நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றார்

செவ்வாழை, தர்பூசணி போன்றவற்றிற்கு காய்கறி பயிர்களுக்கும் நிறததை அதிகரிக்கப் பயன்படுகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories