பயிர்கள் களைதல்என்பதுவயலில் அதிக எண்ணிக்கையில் உள்ள பயிர்களை பிடுங்கி எடுப்பது ஆகும். அந்தந்த பயிருக்கு தகுந்த இடைவெளி விட்டு பயிர்களையும் நீக்கவேண்டும் .அதிக எண்ணிக்கையில் பயிர்கள் இருந்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே விதைத்த 15 முதல் 20 நாட்களில் அடர்த்தி உள்ள இடத்தில் பயிர்களை அவசியம் நீக்கவேண்டும்.
தொழு உரம்
தொழு உரம் என்பது நன்கு மக்கிய மாட்டுச்சாணம் ஆகும். இரண்டு மாடுகள் மூலம் ஒரு ஆண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம் .மாட்டு சாணத்தை விட மாட்டின் சிறுநீரில் தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மாடுகள் தின்று கழித்ததை அதில் பரப்பி அவற்றின் சிறுநீர் கழிக்கும் படி செய்து அதை சேகரித்து மட்கச் செய்து தொழு உரம் தயாரிக்கலாம். இதை மண்ணில் இடுவதால் மண்ணிற்கு இயற்கையான வழியில் ச த்துக்கள் கிடைக்கும் .இது மண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சந்தையை அதிகரிக்க உதவுகிறது.