மண்பானை செடி தைலம்
சில இயற்கை உரங்கள் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் பூச்சிக் கொல்லியாகவும்பயன்படுகிறது.
பூச்சிக் கொல்லியாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும்பயன்படுத்தும் முறை உ ரங்களில் ஒன்றான மண்பானை செடி தைலம் தயாரிப்பு.
தயாரிக்கும் முறைகள்
மண் பானை தயாரிக்க முதலில் வேம்பு இலை 50 கிராம், மிளகு 50 கிராம்,நொச்சி இலை 50 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்து கூழாக்கி கொள்ள வேண்டும் .மேலும் 50 கிராம் பயிரை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் .பிறகு ஏற்கனவே கூழாக்கி வைத்துள்ள இலைகளுடன் கூடிய கலக்கவேண்டும். பிறகு தயிர் மற்றும் தண்ணீருடன் தயார் செய்யப்பட்டுள்ள கலவையை நன்கு கலக்கவும். இந்த கலவையை ஒரு மண் பானையில் வைத்து பானையின் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்த கலவையை கலக்க வேண்டும் .இவ்வாறு 15 முதல் 20 நாட்களுக்கு கலவையில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.