மண்புழு உரத்திலுள்ள சத்துகள் என்னென்ன? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க…

மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.

பொதுவாக மண் புழு உரத்தில் 15 – 21 சதவீதம் அங்கக கார்பன், 0.5 – 2 சதவீதம் தழைச்சத்து, 0.1 – 0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5 – 1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் கொடுக்கணும்?

நெல், கரும்பு, வாழை – 2000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

மிளகாய், கத்தரி, தக்காளி – 1000 கிலோ மண்புழு உரம் /ஏக்கர்

நிலக்கடலை, பயறுவகைகள் – 600 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

மக்காச்சோளம், சூரியகாந்தி – 1000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

தென்னைமரம், பழமரங்கள் – ஒரு மரத்துக்கு 10 கிலோ மண்புழு உரம்

மரங்கள் – 5 கிலோ மரம் ஒன்றுக்கு மண்புழு உரம்

மாடித் தோட்டம் – 2 கிலோ மண்புழு உரம் / செடிக்கு

மல்லிகை, முல்லை, ரோஜா – 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories