மாட்டுச்சாணம் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல்

ஒரு இடத்தில் கழிவுகளை மட்க செய்யும் மண்புழு உர தயாரிப்புத் தொட்டியை அமைக்க வேண்டும். தொட்டியில் தேங்கும் நீரை வெளியேற்றும் வகையில் சிறிய துளை கொண்ட கழிவு நீர் வெளியேற்றும் வசதி இருக்க வேண்டும். தொட்டி அகலம்அதிகபட்சமாக 15 மீட்டர் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நல்ல தரமான மண்புழு உர உற்பத்திக்கு சரியான அளவு ஈரப்பதத்தை நிலை நிறுத்த வேண்டும். அதிகப்படியான வெப்பத்தை அதிகப்படுத்தி மண்புழுக்களை கொன்று விடாமலிருக்க மண்புழு உரத் தொட்டி கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். மண்புழு உரம் தயாரிப்பு செயல்பாடு நடைபெறும் நிலையில் தொட்டியில் கோடைக்காலங்களில் தினமும் நீர் தெளிக்கப்பட வேண்டும் .மழைக் காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் தெளிக்கப்பட வேண்டும். மண்புழு உரத் தயாரிப்பு தொட்டிகளை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது .இது தொட்டியில் வெப்பநிலையை அதிகப்படுத்தும் மண்புழு உர தொட்டியிலிருந்து கரையான் எலி பல்லி போன்றவைகள் இறங்கி சேதப்படுத்தாமல் இருக்க வேம்பு கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். நன்கு பராமரிக்கப்பட்ட மண்புழு உரம் 60 முதல் 70 நாட்களில் தயாராகிவிடும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories