மாட்டுச் சாணம் ஏன் உரமாகப் பயன் படுகிறது?

மாட்டுச்சாணம் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான 24 வகையான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது சுற்றுப்புறத்திலுள்ள பாக்டீரியாக்கள் பூஞ்சை மற்றும் புழுக்கள் மூலமும் சாணம் சிதைக்கப்பட்ட இயற்கை உரமாக மாறுகிறது.

இதில் நைட்ரஜன் பொட்டாசியம் சல்பர் இரும்பு கோபால்ட் மெக்னீசியம் காப்பர் கால்சியம் பாஸ்பரஸ் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன.

காய்களை எப்படி இயற்கை முறையில் பழுக்க வைக்க வேண்டும்?

காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க நன்றாக விளைந்த முற்றிய காய்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.

வைக்கோல் மீது காய்களை அடுக்கி அதன்மேல் வைக்கோல் கொண்டு மூடிவிட்டு வைக்கோளிலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் காய்கள் பழுத்து விடும்.

சூரிய ஒளி புகாத இருட்டு அறையில் காய்களை அடுக்கி வைத்தால் அறை வெப்பத்தினால் காய்கள் பழுத்து விடும்.

பருத்தியில் காய்புழுவை எப்படி கட்டுப்படுத்தலாம்?

பருத்தி பயிரில் பூச்சிகளின் சேதத்தை கட்டுப்படுத்த ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பருத்தி பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

கொத்தவரங்காயை ஊடுபயிராகப் பயிரிடும் போது பருத்தியில் காய் புழு தாக்குதல் குறையும்.
சூடோமோனஸ் ஐ எப்படி பயன்படுத்துவது?

சூடோமோனஸ் எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 2 கிலோ சூடோமோனஸ்200 கிலோ மக்கிய இயற்கை உரம் கலந்து நான்கு நாட்கள் நிழலில் காற்று புகாமல் மூடி வைத்த பிறகு நிலத்தில் ஈரம் இருக்கும்போது இடலாம்.

சூடோமோனாஸ் ஒரு கிலோ பவுடர் 1oo லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.

மாட்டிற்கு செருமள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

பொன்னாங்கண்ணிக் கீரை1oo கிராம் பெரியநங்கை இல்லை 1oo கிராம் ஆகிய
இரண்டையும் அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுக்க வேண்டும்.

கண்டங்கத்திரி காயை ஓரிரவு வெள்ளாட்டு கோமியத்தில் ஊறவைத்து பிழிந்து இரண்டு சொட்டுகள் வீதம் மூக்கில் விட வேண்டும்.

சிற்றாமுட்டி வேர் 25 கிராம் அளவிற்கு அரைத்து நீருடன் கலந்து உள்ளே கொடுக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories