மீன் அமினோ அமிலம்.
தழைச்சத்தை இயற்கையான முறையில் நாம் தயாரித்து வழங்க உதவுவது மீன் அமினோ அமிலம். ஆகும்.
ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இது பரவலாக இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களிடம் உள்ளது.
மீன் அமினோ அமிலம். தயாரித்தல்
1 கிலோ மீன்
1 கிலோ நாட்டு வெல்லம்
மீனைப் பொறுத்த அளவில் அது உண்ணப் பயன்படாத மீனாக இருந்தால் போதுமானது மேலே கூறிய இரண்டு பொருட்களையும் 2 கிலோ பிடிக்கும் அளவுள்ள மூடியுள்ள புட்டியில் இட வேண்டும்.
பிளாஸ்டிக் புட்டியாக இருந்தாலும் தவறில்லை. கண்ணாடி சிறந்தது. பெரிய பாத்திரத்தில் கூடாது. இதனுடன் நீர் சேர்க்கக் கூடாது. இரண்டு பொருட்களை மட்டும் போட்டு நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை இறுக மூடி வைக்க வேண்டும்.
22 நாட்களில் ( சில சமயம் இதற்கு முன்பே ) மிக நன்றாக நொதித்து தேன் போல மாறிவிடும். இதைப் வடிகட்டி எடுத்தால் 300 மில்லி வரை சாறு கிடைக்கும்.
இது மிகச் சிறந்த தழை ஊட்டம் தரும் சாறு. இதை ஒரு லிட்டருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது கலந்து விடலாம்.